சக்தி சௌந்தர்ராஜன் தமிழ் சினிமாவில் வித்யாசமான கதைகளில் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளார். பிரசன்னாவின் நாணயம் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் வித்தியாசமான கதைகளத்தில் இயக்கிய படங்களை தற்போது பார்க்கலாம்.
நாய்கள் ஜாக்கிரதை : சிபிராஜ், அருந்ததியின் நடிப்பில் வெளியான திரைப்படம் நாய்கள் ஜாக்கிரதை. இப்படத்தில் நாயை முதன்மை கதாபாத்திரமாக வைத்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக பாராட்டுக்கள் குவிந்தது.
மிருதன் : ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மிருதன். இதில் மனிதனின் மூளையில் முழுக்க முழுக்க மிருக வெறியை மட்டும் தூண்டும் விதமாக ஒரு நோயை மையமாக வைத்து எடுத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
டிக் டிக் டிக் : ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டிக் டிக் டிக். இப்படம் விண்வெளி சம்பந்தமான படமாக எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் ஜெயம் ரவி மகன் ஆரன் அசீஸ் நடித்திருந்தார். இந்தப் படமும் விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.
டெடி : சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டெடி. உயிரற்று இருக்கும் பொம்மையில் உடல் நுழைவது போன்ற அனிமேஷன் படமாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. மேலும் மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல்களையும் கண்டுபிடிக்கும் விதமாக இப்படம் அமைக்கப்பட்டு இருந்தது.
கேப்டன் : டெடி படத்திற்குப் பிறகு மீண்டும் ஆர்யாவின் கேப்டன் படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருந்தது. இப்படம் ஏலியன்களை வைத்து ஒரு அதிரடி படமாக எடுக்கப்பட்டுள்ளது.