புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஆதியின் முகத்திரையை கிழித்த சந்தியா.. அவமானத்தில் கூனி குறுகிய சிவகாமி

விஜய் டிவியில் பிரபல தொடரான ராஜா ராணி 2 தற்போது சுவாரஸ்யமான கதைகளத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஜெசி என்ற பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றிய ஆதி தற்போது அந்த பெண்ணின் கர்ப்பத்திற்கு தான் காரணம் இல்லை என அடித்து பேசுகிறார்.

ஆனால் இதில் சரவணன் மற்றும் சந்தியாவிற்கு ஏதோ சந்தேகம் எழுகிறது. அதன் பின்பு ஜெசி சந்தியாவை நாடி தனக்கு நீதி கிடைக்க போராடி வருகிறார். மறுபக்கம் ஆதிக்கு திருமணம் செய்து வைக்க சிவமகாமி குடும்பம் ஏற்பாடு செய்கிறது.

Also Read :சினிமாவை மிஞ்சும் சீரியல்.. பாரதி கண்ணம்மாவில் ஏற்பட்ட அதிரடி டுவிஸ்ட்

முதலாவதாக பெண்பார்ப்பதற்காக சிவகாமியின் மொத்த குடும்பமும் சென்றுள்ளது. அங்கு மணப்பெண் ஆதியிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைக்கிறார். ஆதியும் அந்த அறைக்குள் சந்தோசமாக செல்ல அங்கு ஜெசி இருக்கிறார். முதலில் ஆதி அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பின்பு நீ முதலில் கர்ப்பமான விஷயத்தை என்னிடம் சொல்லி இருக்க வேண்டும். என்னுடைய குடும்பத்தின் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தி விட்டாய் என ஆவேசமாக ஆதி பேசுகிறார். மேலும் இந்த கர்ப்பத்தை கலைத்து விட்டு வேற வேலையை பாரு என்று கூறுகிறார்.

Also Read :பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு கெட்ட நேரம் தொடங்கியாச்சு.. ஒரே பதட்டத்தில் மூர்த்தி, தனம்

பின்பு ரூமை விட்டு வெளியே வரும் போது மொத்த குடும்பமும் கதவின் பின்னால் உள்ளனர். இதை பார்த்து அதி ஆச்சரியமடைகிறார். நம்பிக்கை வைத்த மகன் இப்படி செய்து விட்டானே என தாங்க முடியாத துக்கத்தில் சிவகாமி கதறி அழுகிறார். மேலும் இந்த பெண்பார்க்கும் படலம் எல்லாமே சந்தியாவின் ஏற்பாடு தான்.

இதன் மூலம் ஆதி முகத்திரையை கிழித்துள்ளார் சந்தியா. ஒருவழியாக சிவகாமி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உண்மை தெரிந்ததால் விரைவில் ஜெசி மற்றும் ஆதியின் திருமணம் நடைபெற உள்ளது. மேலும் சந்தியாவுக்கு எதிராக பல வேலைகளை ஆதி செய்ய உள்ளார்.

Also Read :ஸ்கூல் பீஸ் கூட கட்ட துப்பில்ல, ராதிகாவிடம் கெஞ்சும் கோபி.. இந்த அசிங்கத்தை நேரில் பார்த்த பாக்கியா

Trending News