சமீபத்தில் வெளியான விஜய் தேவரகொண்டாவின் லைகர் திரைப்படம் அட்டர் பிளாப் அடித்து விட்டது. எல்லாருமே அதிகமாக எதிர்பார்த்த திரைப்படம் என்றால் அது லைகர் தான். ஆனால் படம் ஒரு மாநிலத்தில் கூட பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் பெறவில்லை.
லைகர் விளையாட்டும், ஆக்சனும் கலந்த படம். ஆனாலும் தேவரகொண்டாவுக்கு இந்த ஜானர் ரொம்ப புதுசு. இதில் அவர் குத்துசண்டை வீரராக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோனித் ராய் நடித்திருக்கின்றனர். மேலும் உலக புகழ் பெற்ற குத்து சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். இவருக்கு மட்டும் சம்பளம் 25 கோடி.
125 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பான் இந்தியா மூவியாக வெளியானது. படம் படு தோல்வி அடைந்ததை அடுத்து தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்திருக்கின்றனர்.
தென் மாநிலங்களில் பட விநியோகம் செய்த வாரங்கல் ஸ்ரீனு பேசுகையில், தன்னுடைய மொத்த முதலீட்டில் 65 சதவீதம் இழந்து விட்டதாகவும், உண்மையை சொல்ல போனால் எல்லாமே நாசமாய் போய் விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
திரையுலகம் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது என்றும், நடிகர்களை தடை செய்வதை பற்றி யோசிக்காமல் ஏழை குடும்பங்கள் பாதிக்கப்படுவதை உணர வேண்டும் என்றும் கூறியுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகர் ஏராளமான பெண் ரசிகர்களை கொண்ட விஜய் தேவரகொண்டா நடித்த இந்த படத்திற்கு IMDB புள்ளி 2.8 ஆகும். தி லெஜெண்ட் திரைப்படமே 5.3 புள்ளிகளை பெற்றது.
பட விநியோகஸ்தர் தன்னுடைய மொத்த முதலீட்டையும் இந்த படத்தில் போட்டு நஷ்டமடைந்திருப்பது அவருடைய ஆதங்கமான பேச்சிலேயே தெரிகிறது. விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் என்று ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கதையில் சொதப்பியது கூட தோல்விக்கு காரணமாக இருக்கலாம்.