நடிகை சமந்தா எடுத்த திடீர் முடிவால் அவருடைய கைகளில் இருந்த இரண்டு முக்கிய படங்களை தவறவிட்டிருக்கிறார். இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் கூடிய சீக்கிரம் சமந்தா திரையுலகில் இருந்து தயாரிப்பாளர்களால் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
பொதுவாகவே தென்னிந்திய சினிமா உலகில் ஒரு நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டால் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகளை இழந்துவிடுவார். அதிலும் அவர்கள் சொந்த வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அது சினிமா வாழ்க்கையையே காலி ஆக்கிவிடும்.
ஆனால் இந்த இரண்டு ஸ்டீரியோடைப்புகளையும் உடைத்தவர் தான் நடிகை சமந்தா ரூத் பிரபு. நாக சைதன்யாவுடனான திருமணத்திற்கு பிறகும் சமந்தா பல நிறைய நல்ல படங்களில் கதாநாயாகியாக நடித்தார். நான்கு வருடமும் அவருடைய மார்க்கெட் அப்படியே இருந்தது.
நான்கு வருடத்திற்கு பிறகு சமந்தா-நாக சைதன்யா பரஸ்பரமாக திருமண உறவிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். விவாகரத்திற்கு பிறகு சமந்தாவுடைய மார்க்கெட் இன்னும் அதிகமாக ஏறியது. தென்னிந்திய முக்கிய நடிகைகளில் முதல் மூன்று இடத்தில் சமந்தா இருக்கிறார்.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை கொண்ட யசோதா, சகுந்தலா போன்ற படங்களில் சமந்தா நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் SR பிரபுவின் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க சமந்தாவை அணுகிய போது அவர் சம்பளமாக 5 கோடி கேட்டுள்ளார். இதனால் அந்த படத்தில் சமந்தா ஒப்பந்தமாகவில்லை.
சரி சின்ன படங்களில் நடிக்க தான் சமந்தா இவ்வளவு டிமாண்ட் செய்கிறார் என்று பார்த்தால் தெலுங்கில் மிக முக்கிய இயக்குனரான கொரட்டல்ல சிவா படத்தில் நடிக்க 2 கோடிக்கு கையெழுத்திட்ட இவர் இப்போது 4 கோடி கேட்டு இல்லை என்று தெரிந்ததும் விலகி இருக்கிறார்.