வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தனி ஒருவனாக தீவிரவாதிகளிடமிருந்து போராடும் பாரதி.. நெல்சன் பார்த்தா சினிமாவை விட்டு ஓடிருவாரு

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி முதன்மை மருத்துவராக வேலை செய்யும் விக்ரம் பாபு ஹாஸ்பிடலை தீவிரவாதிகள் முற்றுகையிட்டுள்ளனர். தங்களுடைய 4 கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த ஹாஸ்பிட்டலில் இருக்கும் பொதுமக்களை பணயக் கைதிகளாக தீவிரவாதிகள் வைத்திருக்கின்றனர்.

அதே மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால், இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக பாரதி ஹாஸ்பிடலுக்கு வரும் நிலை ஏற்படுகிறது.

Also Read: தீவிரவாதியிடம் கெத்தாய் பேசி கழுத்தறுத்த கண்ணம்மா.. குளிர்காயும் வெண்பா

அவருடன் போலீஸ் அதிகாரி ஒருவரையும் உள்ளே அனுப்ப பிளான் போட்டனர். இதனால் மத்திய அமைச்சரின் உயிரைக் காப்பாற்றுவதற்காகவும், தீவிரவாதிகளிடமிருந்து பொதுமக்கள் மற்றும் பாரதியின் குடும்ப உறுப்பினர்களான கண்ணம்மா, லஷ்மி, அகிலன் அஞ்சலி ஆகியோரை மீட்டு வருவதற்காக போலீஸ் போட்ட பிளானுக்கு ஏற்ப பாரதி ஹாஸ்பிடலுக்கு நுழைகிறார்.

பாரதியுடன் கூடவந்த போலீஸ் அதிகாரியை டாக்டர் அல்ல என கண்டுகொண்ட தீவிரவாதிகள், அவரை சுட்டு சாய்த்தனர். அதன் பிறகு தனி ஒருவனாக தீவிரவாதிகளிடமிருந்து போராடும் பாரதி, சென்ட்ரல் மினிஸ்டரின் ஹார்ட் ஆபரேஷனை மேற்கொள்ளப் போகிறார்.

Also Read: சென்ட்ரல் மினிஸ்டரை வைத்து சீன் போட்ட பாரதி.. சிபிஐ லெவலுக்கு புலன் விசாரணை செய்யும் கண்ணம்மா

‘நாங்கள் சொல்வதை மட்டுமே செய்யவேண்டும். சென்ட்ரல் மினிஸ்டரின் உயிருக்கு மட்டும் ஏதாவது ஆபத்து வந்தால், இங்குள்ள உன்னுடைய குடும்ப உறுப்பினர்களை ஒவ்வொருவராக கொன்று வீசி விடுவேன்’ என்று பாரதியை தீவிரவாதிகள் மிரட்டுகின்றனர்.

இவ்வாறு பரபரப்பான காட்சிகள் பாரதிகண்ணம்மா சீரியலில் ஒளிபரப்பாகிறது. நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜயின் பீஸ்ட் பட ரேஞ்சுக்கு தீவிரவாதிகள் பாரதிகண்ணம்மா சீரியலை உருட்டுவதை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கலாய்த்து வருகின்றனர்.

Also Read: டிஆர்பி-யில் தூள் கிளப்பும் சன் டிவி.. டாப் 5லிருந்து துரத்தப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்

Trending News