பா ரஞ்சித்தை பாராட்டும் சாக்கில் ரஜினி செய்த தந்திரம்.. இது சாத்தியமா என குழப்பத்தில் கோலிவுட்

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்று கொண்டிருக்கும் திரைப்படம் ஒன்றை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனம் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார். இது அந்த படக்குழுவிற்கு ஒரு மிகப்பெரிய உந்துதலை கொடுத்திருக்கிறது.

பொதுவாக ரஜினிகாந்த் இப்போதெல்லாம் எந்த புதிய படத்தை பார்த்தாலும் அந்த படங்களை மனதார பாராட்டுகிறார். ட்வீட் மூலமாகவோ அல்லது கால் செய்தோ ரஜினி அந்த படத்தை பற்றி பேசுகிறார். இது இப்போது இருக்கும் புது இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் ஒரு புதிய எனர்ஜியை கொடுக்கிறது.

அந்த வரிசையில் இப்போது ரஜினியின் பாராட்டை பெற்ற படக்குழு தான் நட்சத்திரம் நகர்கிறது. யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் ப்ரொடக்சன் தயாரிப்பில் உருவான இந்த படத்தை இயக்குனர் பா . ரஞ்சித் இயக்கி இருக்கிறார். துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ரஜினி ஏற்கனவே ரஞ்சித் இயக்கத்தில் காலா, கபாலி என்ற இரண்டு படங்களில் நடித்து இருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே ரஜினிக்கு சினிமா இண்டஸ்ட்ரியில் ஒரு நல்ல இமேஜை தக்க வைத்தது. இப்போது மீண்டும் ரஞ்சித் ரஜினிக்கு ஒரு கதை சொல்லி இருக்கிறார். ஒரு வேளை இந்த படம் ரஜினியின் 171 வது படமாக இருக்கலாம். ரஜினி பாராட்டியது இந்த கூட்டணிக்கான யுத்தியாக கூட இருக்கலாம் என்கிறார்கள்.

காதலை மையமாக வைத்து அதை சுற்றி நடக்கும் அரசியலை பற்றி பேச முயற்சித்திருக்கிறார் ரஞ்சித். இந்த படத்தை பார்த்து விட்டு ரஜினி, ரஞ்சித் இதுவரை இயக்கிய படங்களிலேயே நட்சத்திரம் நகர்கிறது தான் பெஸ்ட் என்றும், இயக்கம், ஒளிப்பதிவு, கலை இயக்கம் என அத்தனையும் மிக சிறப்பு என கூறினார்.

மேலும் ரஜினி, இந்த படம் தன்னுடைய நாடக கால வாழ்க்கையை ஞாபகப்படுத்துவதாகவும், தான் ஒரு நாடக கலைஞன் என்பதால் இந்த படத்தோடு தன்னால் ஒன்றி போக முடிகிறது என்று கூறிய அவர் தன்னுடைய நாடக கால நினைவுகளையும் பகிர்ந்து இருக்கிறார். தலைவருக்கு கதை பிடித்துப் போனால் பா ரஞ்சித், விக்ரம் கூட்டணி படத்தை முடித்துவிட்டு ரஜினியை வைத்து இயக்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →