செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

எகிறும் பட்ஜெட், ஒரு காட்சிக்கு 8 கோடி செலவு.. வேற லெவலில் உருவாகும் வெற்றிமாறனின் விடுதலை

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு பல வருடங்களாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில் விஜய் சேதுபதியின் கால்சூட் பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போவதாக கூறப்பட்டது.

தற்போது படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. காவல்துறையின் பயிற்சி மையங்களில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

Also Read : பெரும் பிரச்சனை பண்ண போகும் வெற்றிமாறன்.. வடசென்னையால் இடியாப்பச் சிக்கலில் தனுஷ்

விடுதலை படத்தில் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 4 கோடி பட்ஜெட்டில் ஆரம்பித்த விடுதலை படம் தற்போது 40 கோடியை நெருங்கியுள்ளதாம்.

விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களை தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் இப்படத்தை தயாரித்து வருகிறது. இதில் ஒரு ரயில் விபத்து காட்சி அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் பாலம் ஆகியவற்றிக்கு செட்டுகள் போடப்பட்டு வருகிறது.

Also Read : விடுதலை பார்த்துவிட்டு சூரியை விமர்சித்த விஜய்சேதுபதி.. அந்த மாதிரி ட்ராக் இனி வேண்டாம்

அதாவது 90-கால கட்டத்தில் உள்ளது போலவே ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 8 கோடி செலவில் இந்த ரயில் விபத்து காட்சி எடுக்கப்பட உள்ளதாம். அவ்வாறு விடுதலை படத்தில் முக்கிய திருப்பமாக இந்த காட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விடுதலை படம் வெளியான பிறகு இந்த காட்சி பெரிய அளவில் பேசப்படும் என கூறப்படுகிறது. அவ்வாறு வெற்றிமாறன் இந்த காட்சியை செதுக்க உள்ளாராம். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். தமிழில் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் வெளியிடுகிறார்.

Also Read : விடுதலை படத்தில் இருந்து விடுதலையான சூரி.. விஷ்ணு விஷாலுக்கு போட்டியாக எடுக்கப்போகும் புது அவதாரம்!

Trending News