செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சறுக்கலையே சந்திக்காத 5 மெகா ஹிட் இயக்குனர்கள்.. ரஜினி முதல் தனுஷ் வரை காத்து கிடக்கும் ஒரே டைரக்டர்

சினிமா, விளையாட்டு என அனைத்து துறைகளிலுமே வெற்றி, தோல்வி என்பது சாதாரண ஒன்றுதான். ஆனால் நமக்கு பிடித்த தொழிலில் அதீத விருப்பம் இருந்தால் தோல்வியை தவிர்க்கலாம். அவ்வாறு தமிழ் சினிமாவில் 5 இயக்குனர்கள் தற்போது வரை தோல்வி படத்தையே கொடுத்ததில்லை.

ரஜினி முதல் தனுஷ் வரை முன்னணி நடிகர்கள் இவர்களின் படங்களின் கால்சீட்டுக்காக காத்துக் கிடக்கின்றனர். முக்கியமாக ரஜினி, அஜீத், தனுஷ் போன்ற ஹீரோக்கள் லோகேஷ் இயக்கத்தில் எப்போது நடிக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். தனது திறமையால் தற்போதும் தோல்வியை கொடுக்காமல் வெற்றியை மட்டுமே தொடர்ந்து கொடுத்து சினிமாவில் ஜொலிக்கும் அந்த 5 இயக்குனர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

Also Read : அவரு கூப்பிட்டாருனு என் இமேஜை கெடுத்துக்க முடியாது.. ரஜினியுடன் நடிக்க மறுத்த சிவகார்த்திகேயன்

ராஜமௌலி : பிரம்மாண்ட படங்களை தொடர்ந்து கொடுத்து வருபவர் இயக்குனர் ராஜமௌலி. தெலுங்கு மொழியில் பல படங்களை ராஜமௌலி இயக்கியுள்ளார். உலக சினிமாவே திரும்ப பார்க்கும் அளவிற்கு பாகுபலி என்ற படத்தை இயக்கியிருந்தார். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படமும் வசூல் வேட்டையாடியது.

வெற்றிமாறன் : தனுஷின் ஆஸ்தான இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தனுசுக்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அட்லி : ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. தளபதி விஜய்க்கு தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றி படங்களை கொடுத்திருந்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த அட்லி தற்போது பாலிவுட் பக்கம் சென்று உள்ளார். ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

Also Read : பெரும் பிரச்சனை பண்ண போகும் வெற்றிமாறன்.. வடசென்னையால் இடியாப்பச் சிக்கலில் தனுஷ்

லோகேஷ் கனகராஜ் : மாநகரம் படத்தின் மூலம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்துள்ளார். இவருடைய இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் இயக்க உள்ளார்.

புஷ்கர்-காயத்ரி : தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் இடம்பெற்ற ஜோடி புஷ்கர் காயத்ரி. இவர்கள் ஓரம்போ, வா குவாட்டர் கட்டிங் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். மேலும், விக்ரம் வேதா படத்தை இயக்கி அனைவரது கவனத்தையும் பெற்று இருந்தனர். அண்மையில் அஜித், புஷ்கர் காயத்ரி படத்தில் இணைவதாக தகவல் வெளியாகி இருந்தது.

Also Read : கமலுக்கு ஒரே படத்தில் 100 கோடி சம்பாதிச்சு கொடுப்பேன்.. லோகேஷ் கூறிய ஷாக்கான காரணம்

Trending News