புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

பணத்துக்காக குடும்பத்தையே மறந்த வாரிசு நடிகை.. அக்கட தேசத்தில் அடிக்கும் லூட்டி

பிரபல நடிகரின் மகளான அந்த வாரிசு நடிகை மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைத்துறையில் அறிமுகமானார். ஆனால் அவரின் போதாத காலம் அவருக்கு பெரிய அளவில் ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் மனம் தளராத அவர் வில்லி போன்ற அனைத்து கேரக்டர்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் மாஸ் நடிகருடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். ஆனாலும் கோலிவுட்டில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத அந்த நடிகை தற்போது பக்கத்து மாநிலத்திற்கு சென்று விட்டார்.

Also read:இப்பதான் வயசுக்கு வந்த மாதிரி வெட்கப்படுறீங்க, மானமே இல்லையா.. வெறுப்பை சம்பாதிக்கும் ஜோடி

அங்கு நடிகைக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறதாம். இதற்காகவே தன்னுடைய உடல் எடையை பாதிக்கும் மேல் குறைத்த அவர் தற்போது பார்ப்பதற்கே முற்றிலும் வேறு தோற்றத்துடன் இருக்கிறார். அவரா இவர் என்று கேட்கும் அளவுக்கு அவர் முகத்திலும் ஏராளமான வித்தியாசம் இருக்கிறது.

சமீபத்தில் அவர் தன் அப்பாவின் இரண்டாம் மனைவியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் வைரலானது. அதைத்தொடர்ந்து அவருக்கு தற்போது தமிழிலும் வாய்ப்புகள் வரத் தொடங்கி இருக்கிறதாம்.

Also read:15 வயதிலேயே கற்பை இழந்துட்டேன்.. அசிங்கத்தை கூச்சமில்லாமல் பேசிய சர்ச்சை நடிகை

குடும்பத்தை மறந்து பணத்துக்காக ஊரையே காலி செய்துவிட்டு சென்ற அந்த வாரிசு நடிகைக்கு தற்போது கை மேல் பலன் கிடைத்துள்ளது. இருப்பினும் அவர் அக்கட தேசத்தை விட்டு வர மறுக்கிறாராம். தாய் மொழியை விட மற்ற மொழிகளில் தான் அவருக்கு நல்ல கேரக்டர்கள் வருவது மட்டுமல்லாமல் அதிக சம்பளமும் கிடைக்கிறதாம்.

அதனால் அவர் அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. பணம் பத்தும் செய்யும் என்பதற்கு தற்போது இந்த நடிகை உதாரணமாக இருக்கிறார். ஆனால் நடிகையோ இதைப் பற்றி கூறாமல் வெளிமாநிலத்திற்கு சென்ற பிறகுதான் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறேன் என்று கூறி வருகிறார்.

Also read:ஒரு வழியா விவாகரத்து பிரச்சனை முடிஞ்சிடுச்சு.. மாமியை சமாதானப்படுத்திய நடிகர்

- Advertisement -spot_img

Trending News