செல்வராகவன் தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த மாத இறுதியில் வெளியாகும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்தில் தனுஷின் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது.
அதன் காரணமாகவே இந்த திரைப்படத்திற்கு தற்போது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதனால் தான் செல்வராகவன் தற்போது தைரியமாக மணிரத்தினத்திற்கு போட்டியாக களமிறங்கியுள்ளார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனால் பல திரைப்படங்கள் அந்த வாரத்தில் வெளிவராமல் தள்ளி போடப்பட்டுள்ளது.
ஆனால் செல்வராகவன் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு முந்திய நாள் நானே வருவேன் திரைப்படத்தை வெளியிட இருக்கிறார். அந்த வகையில் செப்டம்பர் 29ஆம் தேதி அப்படம் வெளியாக இருக்கிறது. படம் ரிலீஸ் விஷயத்தில் தான் செல்வராகவன் இப்படி போட்டி போட்டுள்ளார் என்று பார்த்தால் மற்றொரு விஷயத்திலும் மணிரத்தினத்திற்கு போட்டியாகவே இறங்கி இருக்கிறார்.
அதாவது பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது. அதேபோன்று செப்டம்பர் 7ஆம் தேதி மாலை 4.40 மணிக்கு நானே வருவேன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக இருக்கிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த இரு படங்களுக்கும் இடையே மற்றொரு ஒற்றுமையும் இருக்கிறது. அதாவது பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளிவருவது போன்று தான் நானே வருவேன் திரைப்படமும் இரண்டு பாகங்களாக வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.