வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

குரளி வித்தை பலிக்கல, இப்ப அடுத்த வித்தை காட்டும் கதிர்.. ரணகளமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் நான்கு அண்ணன் தம்பிகள் சேர்ந்து வாழும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கதிர் ஹோட்டலின் தொழிலின் துவங்கி, எப்படியாவது லாபத்தைக் கொண்டு வரவேண்டும் என பல முயற்சிகளை மேற்கொள்கிறார்.

இருப்பினும் அவரால் லாபம் பார்க்க முடியவில்லை, ஆனால் நஷ்டத்தின் வீதம் மட்டும் ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கிடையில் முல்லையின் அக்காவிடம் கதிர் இந்த கடையிலிருந்து ஒரே மாதத்தில் லாபம் காட்டுகிறேன் என்று சவால் விட்டுள்ளார்.

Also Read: பல வித்தை காட்டியும் நஷ்டத்தில் பாண்டியன் மெஸ்.. கடையை இழுத்து மூட நடக்கும் சதி

இதற்காக முதலில் காலை உணவோடு சேர்த்து, மதிய உணவான கலவை சாதங்களை கொடுத்து சில வாடிக்கையாளர்களை கதிர் கவர்ந்தார். அதன் தொடர்ச்சியாக புரோட்டா, டீ போன்றவற்றை ஸ்டைலாக போட்டு, அதை வாடிக்கையாளர்களை ரசிக்க வைத்தார்.

இப்படி குரளி வித்தைக் காட்டியும் அவையெல்லாம் பலிக்கவில்லை. அடுத்தகட்டமாக சைவ உணவுகளை மட்டுமே பாண்டியன் ஹோட்டலில் சமைத்துக் கொடுத்ததால் தற்போது முட்டை, சிக்கன் பிரியாணி என அசைவ உணவுகளையும் இன்றுமுதல் சமைத்துக் கொடுக்க கதிர் முடிவெடுத்திருக்கிறார்.

Also Read: பூர்வீக வீட்டிற்கும் ஸ்கெட்ச் போட்ட மாமனார்.. நடுதெருவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

இதனால் லாபம் வரும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். மறுபுறம் மூர்த்தி தன்னுடைய பூர்வீக வீடு விற்பதற்காக ஏற்பாடு செய்கிறார். மீனாவின் அப்பா அந்த வீடு வாங்க நினைக்கிறார். ஆனால் மூர்த்திக்கு அவருக்கு கொடுக்க விருப்பமில்லை.

‘கண்டவன் காலில் எல்லாம் விழுவார்களாம். ஆனால் கொண்டவனை மதிக்க மாட்டார்கள்’ என்று மீனா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை மூஞ்சிக்கு நேராகவே திட்டுகிறார். இப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே ரணகளம் ஆகியிருக்கிறது.

Also Read: பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகளா இது? வெறும் பனியனில் அலறவிட்ட வைரல் புகைப்படம்

Trending News