பாரதிராஜாவின் மருத்துவ செலவை கூட கட்ட முடியாமல் இருக்கும் குடும்பம்.. உதவிய பெரும்புள்ளி

தமிழ் சினிமாவில் பல உன்னத படைப்புகளையும் எதார்த்தமான திரைக்கதைகளையும் கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்த பெருமைக்குரியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவரின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடமும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இத்தனை பெருமைக்குரிய பாரதிராஜா, தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு தாத்தாவாக நடித்து அசத்தி இருந்தார்.

ஆனால் அந்தப்படத்தில் அவர் உடல் மெலிந்து காணப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சொல்லும்போது, ‘யாரும் பார்க்க வர வேண்டாம்’ என சொல்லி விட்டார்.

ஆனால் இந்த முறை அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருடைய மருத்துவ செலவிற்காக கட்டணத்தை கூட செலுத்த முடியாத நிலையில் பாரதிராஜாவின் குடும்பம் இருக்கிறது. இதை அறிந்ததும் பாரதிராஜாவின் மொத்த மருத்துவ செலவையும் திமுகவின் முன்னாள் உறுப்பினரும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த அமலா, ரேவதி, ராதா, ராதிகா போன்ற ஹீரோயின்களையும், ஜனகராஜ், நெப்போலியன், பாண்டியன், சந்திரசேகர், கார்த்திக் போன்ற பல நடிகபெருமைக்குரியகளையும் சினிமாத் துறைக்கு அறிமுகப்படுத்தியபெருமைக்குரியவர் இயக்குனர் பாரதிராஜா.

சினிமாவில் இப்படி பலரை அறிமுகப்படுத்தி ஏத்திவிட்ட ஏணியை மறந்துவிட்ட திரைப்பிரபலங்கள், இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு உதவ வேண்டிய நேரத்தில் உதவாமல் இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →