மகாலக்ஷ்மியின் சம்பளம் இவ்வளவா! பிளான் போட்டு திருமணம் செய்த ரவீந்தர்

மகாலக்ஷ்மி-ரவீந்தர் திருமணம் தான் இப்போதைக்கு சமூக வலைத்தளத்தில் சென்சேஷன் டாக்காக இருக்கிறது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் என எங்கு பார்த்தாலும் இவர்கள் சம்மந்தப்பட்ட மீம்ஸ் மற்றும் இண்டர்வீயூக்கள் தான் அதிகமாக இருக்கின்றன.

விஜே மற்றும் சின்னத்திரை நடிகை மகாலக்ஷ்மி மற்றும் தயாரிப்பளார் ரவீந்தர் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து இருக்கிறார்கள்.

மகா சன் மியூஸிக்கில் ஒரு தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின்னர் சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். ரவீந்திரன் சந்திரசேகர் ஒரு படத்தயாரிப்பாளர். இவர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம், மேலும் ரவீந்திரனின் உருவ அமைப்பு, மகா-ஈஸ்வர் பிரச்சனை என எல்லாம் சேர்ந்து இப்போது இந்த ஜோடியை நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.இந்த தம்பதிகள் தங்கள் இன்டெர்வியூக்களின் மூலமாக இந்த விமர்சனுங்களுக்கு எல்லாம் பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.

மகாலக்ஷ்மி பணத்திற்காக மட்டுமே குண்டான உருவ அமைப்பு கொண்ட ரவீந்தரை திருமணம் செய்துள்ளார் என்று கூறுகின்றனர்.ஒரு பக்கம் இந்த ஜோடிகளுக்கு எதிர்ப்பு இருந்தாலும் இன்னொரு பக்கம் இவர்களை ஆதரிக்கவும் செய்கிறார்கள்.

மகாலக்ஷ்மி 20 வருடங்களுக்கு மேலாக மீடியாவில் இருக்கிறார். இவருடைய மாத சம்பளம் மூன்றிலிருந்து நான்கு லட்சமாக இருக்குமாம். மேலும் இவருடைய தந்தை சினிமாவில் நடன பயிற்சியாளார்க இருக்கிறாராம்.

RRR, பொன்னியின் செல்வன் படங்களில் பணியாற்றி இருக்கிறாராம். இவ்வளவு வசதி உள்ள மகாலக்ஷ்மி பணத்திற்காக திருமணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று ட்ரோல் செய்பவர்களுக்கு இவருடைய ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.