செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 31, 2024

410 கோடிக்கு விழுந்த அடி.. பிரம்மாஸ்திரம், டிவிட்டர் விமர்சனம்

அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப்பச்சன், நாகார்ஜுனா, ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான பிரம்மாஸ்திரம் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. கரண் ஜோகர் உள்ளிட்ட பலர் தயாரிப்பில் இப்படம் 410 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது.

மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படத்தை பற்றிய கருத்துக்களை ரசிகர்கள் தற்போது டிவிட்டர் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் படம் குறித்த ஆவலும் ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது.

Also read: விமர்சையாக நடைபெற்ற ஆலியா பட், ரன்பீர் கபூர் திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்

brahmastra
brahmastra

ஆனால் அதை பொய்யாக்கும் வகையில் தற்போது விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர தவறியிருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மிகக் குறைவான ரேட்டிங்கை கொடுத்து வருகின்றனர்.

brahmastra
brahmastra

படத்தில் கதை என்ற ஒன்றுமே இல்லை என்றும், இப்படி ஒரு மொக்கையான திரை கதையை கொடுத்து இயக்குனர் ஏமாற்றி விட்டார் என்றும் ரசிகர்கள் வெளிப்படையாக கூறி வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்திற்கு ரேட்டிங்கே கொடுக்கக் கூடாது என்றும் சிலர் கூறுகின்றனர்.

brahmastra
brahmastra

Also read: ராஜமௌலியின் மீது கடும் கோபத்தில் ஆலியா பட்.. ஆர்ஆர்ஆர் படத்தால் வந்த சோதனை

மேலும் 30 நிமிட கதையை இரண்டரை மணி நேரமாக நீட்டி இழுத்து கொடுத்திருப்பது சற்று சலிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறுகிறார்கள். படத்தில் கேமியோ ரோலில் வரும் ஷாருக்கான் சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தவிர வேறு எதுவும் ரசிக்கும்படி இல்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

brahmastra
brahmastra

Also read: உப்பு சப்பில்லாமல் போன ஆலியா பட்.. ராஜமவுலி பட விவகாரத்தில் அந்தர்பல்டி

ஆக மொத்தம் மிகப் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்ட இந்த திரைப்படம் தற்போது மண்ணை கவ்வியுள்ளது. சமீப காலமாக பாலிவுட்டில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்து வருகிறது. அந்த லிஸ்டில் தற்போது இந்த பிரம்மாஸ்திரமும் இணைந்துள்ளது.

Trending News