புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மகாலட்சுமி ஜோடியை கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பிரபலம்.. எல்லாரு மனசுலயும் இதான் இருந்துச்சு

சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் சமீபத்தில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இணையத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது இவர்களது திருமணம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இவர்கள் குடும்பத்தினர் முன்னிலையில் மிக ரகசியமாக திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் இந்தச் செய்தி இணையத்தில் வைரலான உடன் பல ஊடகங்கள் மகாலட்சுமி ஜோடியை பேட்டி எடுத்து வருகின்றனர். இந்த ஜோடிக்கு பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. தற்போது பிரபல சேனலில் நெறியாளரான முக்தர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியை பேட்டி எடுத்திருந்தார்.

Also Read :எனக்கு மகாலட்சுமிக்கும் 21 வயசு வித்தியாசமா.? கல்யாணத்திற்கு பின் ரவீந்தர் அளித்த பேட்டி

இதில் மக்கள் மனதில் கேட்க நினைத்த கேள்விகளை காரசாரமாக கேட்டுள்ளார் உங்களின் பெற்றோர் சம்மதத்துடன் தான் இந்த திருமணத்தை செய்து கொண்டீர்களா என்று மகாலட்சுமி இடம் கேட்கிறார் ஒரு குழந்தையை வச்சிட்டு இப்படி பண்ணிட்டியேம்மா இது நியாயமா.

காதலுக்கு கண்ணில்லை என்பார்களே அது தான் இதுவா, இவ்வளவு அழகா இருந்தும் இப்படி குண்டா உள்ளவரைக் கட்டிக்க பணம் தானே காரணம் என்று முக்தர் கேட்கிறார். அதுமட்டுமின்றி இப்படி குண்டா, கருப்பா ஒரு ஏழை இருந்தால் நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார் மகாலட்சுமி.

Also Read :மகாலட்சுமி, ரவீந்தரை தொடர்ந்த அடுத்த திருமண ஜோடி.. சஸ்பென்ஸ் ஆக திருமணத்தை முடித்த ராஜா ராணி 2 பிரபலம்

ஆனால் தயாரிப்பாளர் ரவீந்தர் ஏதோ சொல்லி சமாளிக்க முற்படுகிறார். இன்னும் இந்த பேட்டி முழுமையாக வெளியாகாத நிலையில் ப்ரோமோவே ரசிகர்களை அதிர வைத்துள்ளது. முக்தர் கேட்ட கேள்வி எல்லோர் மனதிலும் ஓடி கொண்டு இருந்தது தான் என்பது போல பலர் விமர்சனம் செய்தார்கள்.

சிலர் அந்தப் பெண்ணுக்கு பிடித்திருக்கிறது, வாழப்போவது அவர்தான். தேவையில்லாமல் ஊடகங்கள் மற்றும் சிலர் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் விமர்சனம் செய்வது தவறானது என கூறி வருகிறார்கள். ஆனாலும் இவர்கள் தங்களது வேலையை பார்க்காமல் ஊடகங்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருவது பலரையும் எரிச்சல் அடைய வைப்பதாக கூறுகின்றனர்.

Also Read :நயன்தாரா ரேஞ்சுக்கு அலப்பறை.. மஞ்சள் தாலியுடன் ஹனிமூன் போட்டோவை வெளியிட்ட மகாலட்சுமி

Trending News