வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சிங்கப்பெண்ணாக களம் இறங்கிய பாக்யா.. செக் வைத்த முதலாளி

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் தற்போது வீட்டு செலவை சமாளிக்க முடியாத பாக்கியா அதிக வருமானம் வரும்படியான விஷயங்களை செய்ய வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் சமையலில் பெரிய ஆர்டருக்காக பாக்கியா இன்டர்வியூ சென்றுள்ளார். அங்கு எல்லோருமே மிகப்பெரிய ஆட்களாக இருப்பதால் அவர்களைப் பார்த்து பாக்யா பயப்படுகிறார். ஆனால் எழில் பாக்யாவுக்கு தைரியம் சொல்லி உத்வேகம் கொடுக்கிறார். இதனால் பாக்யாவுக்கு கொஞ்சம் துணிச்சல் வருகிறது.

Also Read :முதல்முறையாக பொதுமக்களும் கலந்து கொள்ளும் பிக் பாஸ் சீசன் 6.. எதிர்பார்ப்பை எகிற விடும் அப்டேட்

அங்குள்ள ஆண்களில் ஒரே ஒரு சிங்க பெண்ணாக பாக்யா உள்ளார். மேலும் அந்தப் போட்டிக்கு வந்திருக்கும் 15 நபர்கள் ஐந்தைந்து நபர்களாக பிரிந்து 15 நிமிடங்களுக்குள் ஒரு டிஷ் செய்ய வேண்டும். ஆனால் அந்த போட்டிக்கு வந்த பலருக்கு சமைக்கவே தெரியாது என்பதால் பாதியிலேயே சென்று விட்டார்கள்.

அதில் சிலர் கலந்து கொண்ட நிலையில் பாக்கியா கொடுத்த பொருளில் 15 நிமிடங்களில் சுவையான உணவை சமைத்துள்ளார். ஜட்ஜிக்கு பாக்யாவின் உணவு பிடித்த போக, இந்த ஆர்டர் கொடுக்க விருப்பம் இருந்தாலும் ஒரே நேரத்தில் பத்திற்கு மேற்பட்ட திருமணத்திற்கு சமைக்கும் அளவிற்கு பாக்யாவிற்கு பின்புலம் இல்லை.

Also Read :டிஆர்பி-யில் டாப் 5 இடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்.. அடித்து நொறுக்கும் சன் டிவி

இதனால் யோசித்துக் கொண்டிருக்கும் போது பாக்யா என்னால் முடியும் என்று சொல்கிறார். இதனால் இன்று நடக்க உள்ள சின்ன பார்ட்டியில் பாக்யா சமைக்கும்படி கூறுகிறார். இதில் மட்டும் நன்றாக சமைத்து விட்டால் இந்த ஆர்டர் உங்களுக்கு தான் என்ற உறுதியளிக்கிறார்.

மேலும் பாக்கியா வெளியில் வந்த எழிலிடம் 50 சதவீதம் ஜெயிச்சுட்டோம். இன்று மட்டும் ஆர்டரை சரியாக செய்து கொடுத்து விட்டால் கண்டிப்பாக நமக்கு இந்த வேலை கிடைத்திடும் என பாக்யா உறுதியாக கூறுகிறார். இவ்வாறு பல சுவாரசியமான திருப்பங்களுடன் இந்த வார பாக்கியலட்சுமி தொடர் வர இருக்கிறது.

Also Read :டாக்டர் பாரதிக்கு இவ்வளவு அறிவா.. தீவிரவாதிகளுக்கு போட்டோ ஸ்கெட்ச்

Trending News