புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அப்பாவை பின்பற்றி ஜெயித்த 5 நடிகர்கள்.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா!

சினிமாவில் வாரிசு நடிகர்கள் என்ற பெயரை வாங்கினாலும் தந்தையைப் போன்றே ஜெயித்த 5 நடிகர்களை இன்றும் ரசிகர்கள் மெச்சுகின்றனர். அதிலும் செவாலியர் சிவாஜி கணேசனுக்கு பிறந்த மகன் பிரபு, புலிக்கு பிறந்தது பூனை அல்ல என்றும் காட்டியிருக்கிறார்.

ராதாரவி: 40களில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் வில்லனாகவும் நடித்து மிரள விட்ட நடிகர் எம்ஆர் ராதா தன்னுடைய படங்களில் சீர்திருத்தக் கருத்துக்களையும், பிராமணர் எதிர்ப்பு கருத்துக்களையும், திராவிட இயக்கக் கருத்துக்களையும் வெகுவாகப் பரப்பி இவரது எதிர்ப்பாளர்களுக்கு கூட இவரது நடிப்பை ரசிக்க வைத்திருந்தார்.

அதன் பிறகு வந்த எம்ஆர் ராதாவின் மகன் ராதாரவி முதன் முதலாக கே பாலசந்தரின் மன்மத லீலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் ஏகப்பட்ட படங்களில் நடித்து தற்போது வரை முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Also Read: சூர்யாவை தூக்கியெறிந்த சங்கர்.. 1000 கோடி பட்ஜெட்டில் நடிக்கப்போகும் பிரபல நடிகர்

பிரபு: சிவாஜி கணேசனின் மகனான பிரபு அப்பா அளவிற்கு வரவில்லை விட்டாலும் அவர் காலகட்டத்தில் இருந்த நடிகர்களுக்கு கடும் போட்டியாளராக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரைப்படங்களில் கலக்கி புலிக்கு பிறந்தது பூனை அல்ல எனக் காட்டினார்.

சூர்யா: 60-களில் சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருமால் பெருமை போன்ற பக்தி படங்களிலும் கே பாலசந்தரின் சிந்துபைரவி ரோஜாப்பூ ரவிக்கைக்காரி போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகரானநடிகர் சிவகுமாரின் மகன் சூர்யா, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது தம்பி கார்த்தியும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

Also Read: ஒரே படத்தில் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்த 6 நடிகர்கள்.. சிம்ரன் அழகில் மயங்கிய வாலி அஜித்

அருண் விஜய்: சுமார் 400 படங்களுக்கு மேல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய், அதிரடி படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருக்கும் இவர், தந்தையைப் போலவே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.

பிரசாந்த்: பிரபல தயாரிப்பாளரான தியாகராஜன் மூன்றாம்பிறை படத்தின் மூலம் விமர்சன ரீதியாக நல்ல பாராட்டைப் பெற்றார். அதன்பிறகு இவர் துவங்கிய சத்யஜோதி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல முன்னணி நடிகர்களின் படங்கள் திரையிடப்பட்டது. இதனால் இவரது மகன் பிரசாந்த் இளம்வயதிலேயே கதாநாயகனாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தார். மேலும் தந்தை-மகன் இருவரும் சேர்ந்து சில படங்களில் நடித்திருந்தனர்.

Also Read: தனுஷ் நடிக்க ஆசைப்பட்ட கதை.. சுயநலமாக பயன்படுத்திக்கொண்ட சூர்யா

இவ்வாறு இந்த 5 நடிகர்களும் தமிழ் சினிமாவில் தனக்கு முன்பு நடித்த தந்தையை கொன்ற ஜெயித்து காட்டியிருக்கின்றனர். இதை அவர்கள் மட்டுமல்ல, அவர்கள் ரசிகர்களும் பெருமையாக நினைக்கின்றனர்.

Trending News