அஸ்வினைப் போல் கதை கேட்கும் போதே தூங்கிய நடிகர்.. ஆச்சரியப்பட வைத்த சம்பவம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற அஸ்வின் தற்போது சினிமாவில் ஹீரோவாக மாறி இருக்கிறார். ஆனால் அவரின் முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அவர் கூறிய சில கருத்துக்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது அவர் தன்னிடம் இயக்குனர்கள் கதை சொல்லும் போது தூங்கி விட்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது சோசியல் மீடியா முழுவதிலும் பெரும் விவாதமாக மாறியது. அதை தொடர்ந்து அஸ்வினை பலரும் மீம்ஸ் மற்றும் ட்ரோல் செய்து கலாய்த்து வந்தனர்.

இதனால் அவர் ஹீரோவாக அறிமுகமான என்ன சொல்லப் போகிறாய் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாமல் போனது. அதனால் சோர்ந்து போன அஸ்வின் தற்போது ஒன்றிரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரைப் போன்று பிரபல நடிகர் ஒருவரும் கதை கேட்கும் போதே தூங்கி விடுவாராம்.

அவர் வேறு யாரும் அல்ல நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் தான். இது பலருக்கும் நம்ப முடியாத தகவலாக கூட இருக்கலாம். ஆனால் சிவாஜி கணேசனுக்கு கதையை கேட்கும் போதே தூங்கிவிடும் பழக்கம் இருந்ததாம். பல சமயங்களில் அவர் தூங்கிய படியே தான் கதையை கேட்பாராம்.

ஆனாலும் அவர் தூங்கும் போது விழிப்புணர்வோடு தான் இருப்பாராம். எப்படி என்றால் கதை கூறிய இயக்குனர் என்ன சொன்னார் என்பதை அவர் கரெக்டாக புரிந்து கொண்டு கூறுவாராம். இதனாலேயே இயக்குனர்கள் அவர் தூங்குகிறாரே என்று அலட்சியம் காட்டாமல் கதையை கூறுவார்களாம்.

இந்த செய்தி தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சிவாஜி இந்த விஷயத்தை ஒருபோதும் பொதுவெளியில் கூறியது கிடையாது. அந்த அளவுக்கு இது ரகசியமாக இருந்திருக்கிறது. ஆனால் அஸ்வின் தவளை தன் வாயால் கெடும் என்பதைப் போல ஆர்வக்கோளாறில் அதைப்பற்றி பேசி வம்பில் மாட்டிக்கொண்டார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →