மீண்டும் பழைய சித்து வேலையை ஆரம்பித்த காமெடி நடிகர்.. தலை தெறிக்க ஓடும் தயாரிப்பாளர்கள்

ரசிகர்கள் மத்தியில் நல்ல செல்வாக்குடன் இருந்த அந்த காமெடி பிரபலம் பல பிரச்சினைகளில் சிக்கி சின்னா பின்னமானார். இதனால் சில வருடங்கள் சினிமாவை விட்டே ஒதுங்க வேண்டிய சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். தற்போது அவர் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி புது வேகத்துடன் மீண்டும் நடிப்புக்கு திரும்பி இருக்கிறார்.

மீண்டும் திரும்பி வந்துள்ள நடிகருக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது அவர் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்தடுத்த திரைப்படங்களிலும் அவர் கமிட்டாகி வருகிறார்.

Also read:எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்.. பெரிய அந்தஸ்துள்ள நடிகைகளை கிழித்து எரியும் பஜாரி நடிகை

இப்படி பிசியாக இருக்கும் நடிகரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் சில ஹீரோ வாய்ப்புகளும் அவருக்கு வருகிறதாம். அந்த வகையில் நடிகர் தற்போது மற்றொரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

அதில் தான் தற்போது ஏழரையே ஆரம்பித்திருக்கிறது. அதாவது நடிகர் அந்த படத்திற்காக சில பல லட்சங்களை சம்பளமாக பேசியிருக்கிறார். ஆனால் திடீரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை அவர் இப்பொழுது 5 கோடி வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறாராம்.

Also read:காசுக்காக படுக்கையை பகிர சொன்ன நடிகையின் அம்மா.. பாதுகாப்பாக அரவணைத்த பிரபலம்!

இதனால் வாயடைத்துப் போன தயாரிப்பாளர் நீங்கள் இந்த படத்தில் நடிக்கவே வேண்டாம் என்று பின்னங்கால் பிடரியில் பட தெறித்து ஓடி இருக்கிறார். ஏற்கனவே நடிகரின் இம்சையால் அவதிப்பட்டவர்கள் ஏராளம் உண்டு. சில காலங்கள் எந்த பிரச்சனையும் பண்ணாமல் இருந்த நடிகர் இப்போது மீண்டும் தன் அட்ராசிட்டியை ஆரம்பித்து இருக்கிறார்.

அவர் ஹீரோவாக நடித்த படமே இன்னும் வெளிவரவில்லை. அப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவும் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. அதற்குள் இவ்வளவு அலப்பறையா என்று திரையுலகில் அவரைப் பற்றி தான் பேச்சாக கிடக்கிறது.

Also read:காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தி.. அவசரப்பட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்ட சோகம்