வாரிசு படத்தை ஓடிடி-யில் வெளியிட தில்லு இருக்கா? ட்ரெண்டாகும் ஹாஷ்டாக்

டிவிட்டரில் அவ்வப்போது எதாவது ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆகும். அப்படி தான் இப்போது WeWantVarisuOnOtt என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி கொண்டு இருக்கிறது. நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு வைரல் ஹாஷ்டாக் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஹாஷ்டாக் இப்போது டிவிட்டரில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

வாரிசு, நடிகர் விஜய்க்கு 66 வது திரைப்படம் ஆகும். நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் நல்ல ஒரு குடும்ப பின்னணி கொண்ட கதையில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் சூட்டிங்கே முடியாத நிலையில் வாரிசு படம் OTT-யில் ரிலீஸ் ஆக வேண்டும் என வேண்டுகோள் விடுத்து ஒரு ஹாஷ்டாக் டிவிட்டரில் பயங்கரமாக டிரண்டாகி கொண்டிருக்கிறது. ஆனால் இதை ட்ரெண்ட் ஆக்குபவர்கள் நடிகர் விஜயின் ரசிகர்கள் இல்லை.

எப்போதுமே சமூகவலைத்தளங்களில் ஹீரோக்களுக்காக ரசிகர்கள் அடித்து கொள்வது வழக்கம். அதிலும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் சண்டைகள் எல்லாம் டிவிட்டரையே தெறிக்க விடும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இம்முறை விஜய் ரசிகர்களுடன் மோதி இருப்பது சூர்யா ரசிகர்கள்.

சூர்யாவின் சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் திரைப்படங்கள் OTT யில் ரிலீஸ் ஆனது. எனினும் இரண்டு படங்களுக்குமே நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. இதில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரை போற்று தேசிய விருது பெற்றுள்ளது.

இப்போது இந்த படத்தை சுட்டிக்காட்டி தான் சூர்யா ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுத்து இருக்கிறார்கள். சூர்யாவை போலவே விஜயும் தைரியமாக OTT யில் வாரிசு படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா என்று சவால் விட்டு இருக்கிறார்கள். மேலும் விஜய்க்கு கடைசி வெற்றிபடம் துப்பாக்கி மட்டும் தான் என்றும் அதுவே சூர்யா விட்டு கொடுத்த கதை தான் என்பது போலவும் ட்வீட் செய்து வருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →