வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சுட்டு போட்டாலும் திருந்தாத பாக்யா.. இன்னும் அந்த மானங்கெட்ட புருஷன் தேவையா?

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. தற்போது பல சுவாரசியமான திருப்பங்களுடன் இந்த வார பாக்கியலட்சுமி தொடர் வர இருக்கிறது. அதாவது கோபியின் இரண்டாவது திருமணத்திற்கு அவரது முதல் மனைவி பாக்யா சமைக்க இருக்கிறார்.

இந்நிலையில் ராதிகாவின் அண்ணன் கல்யாணத்திற்கு என்னென்ன சாப்பாடு செய்ய வேண்டும் என்ற லிஸ்ட்டை அனுப்பி விடுகிறார். அதில் கோபிக்கு பிடித்த இனிப்பு வகைகள் இருப்பதால் இனியா இது ரெண்டுமே அப்பாவுக்கு மிக பிடித்த ஸ்வீட் என்று கூறுகிறார்.

Also Read :பெரிய பிரச்சனையை கிளப்பி விட்ட சக்களத்தி.. பதிலடி கொடுத்த மருமகள்

மேலும் பாக்யாவிடம் எழில் தன்னுடைய தயாரிப்பாளரை பற்றி சொல்கிறார். கதையில் சில மாற்றங்கள் செய்ய சொன்னதால் அதை மறுத்துவிட்டேன் என்று எழில் கூற பாக்யா அவருக்கு ஆறுதல் கூறுகிறார். மேலும் இரவு பாக்யா தூங்கிக் கொண்டிருக்கும்போது கோபியை நினைத்து கனவு காண்கிறார்.

அதாவது தொட்டு தாலி கட்டின புருஷன் தன்னை கைவிட்டாலும் இன்னும் அவரை நினைத்து ஏங்கி கொண்டிருக்கிறார் பாக்கியா. கோபி கேரட் அல்வா செய்து கொடுக்கிறாயா? என கேட்டவுடன் உடனே பாக்கியா கேரட் அல்வா செய்கிறார். அதை பக்கத்தில் இருந்து பார்த்து ரசிக்கிறார் கோபி.

Also Read :பாரதியை இறுக்கி கட்டிப்பிடித்துக்கொண்ட கண்ணம்மா.. இதுதானா உடன்கட்டை ஏறுதலா?.

அதன் பின்பு தான் தெரிகிறது பாக்யா இதை நினைத்து கனவு கண்டிருக்கிறார். பின்பு ஏன் இப்படி பண்ணுனீங்க என்று பாக்யா தனக்குள்ள குமறுகிறார். துரோகம் செய்தாலும் கோபியை மறக்காத பாக்யா அவர் கல்யாணத்துக்கு தான் சமைக்க போகிறேன் என்று தெரிந்தால் பிரளயமே வெடிக்க வாய்ப்புள்ளது.

மேலும் தற்போது கோபியின் அம்மா ஈஸ்வரிக்கு விரைவில் கோபி, ராதிகா திருமணம் நடக்க உள்ள செய்தி தெரிய வந்துள்ளது. இதனால் கோபியின் அப்பாவிடம் இந்த உண்மையை ஈஸ்வரி சொல்லி இருக்கிறார். ஆத்திரம் அடைந்த அவர் கோபியை தட்டி கேட்பதாக சொல்லி கோபத்துடன் பேசுகிறார். இதனால் கோபி, ராதிகா திருமணம் நடக்குமா என்ற எதிர்பார்ப்புடன் பாக்கியலட்சுமி தொடர் சென்று கொண்டிருக்கிறது.

Also Read :புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் விஜய் டிவி.. சன் டிவியை ஒழித்து கட்ட பக்கா பிளான்

Trending News