கன்னடத் திரையுலகில் அறிமுகமாகி, அதன் பிறகு தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட படத்தில் நடித்த பிறகு வேறு லெவலில் மார்க்கெட்டை பிடித்திருக்கிறார்.
இந்தப் படத்திற்கு ராஷ்மிகா மந்தனா ஒரு கோடி சம்பளம் வாங்கிய நிலையில், தற்போது தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுன்னு கோடியில் உயர்த்தி சினிமா தயாரிப்பாளர்களை தலைதெறிக்க ஓட வைத்திருக்கிறார்.
Also Read: பெரும் மனவருத்தத்தில் ராஷ்மிகா.. காட்டுத் தீயாய் பரவும் நைட் பார்ட்டி
இவர் தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமாகி, அதன் பிறகு இரண்டாவது படத்திலேயே தளபதி விஜய் உடன் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தின் மீது ராஷ்மிகா பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார். பாக்ஸ் ஆபிஸ் நாயகனான விஜயின் வாரிசும் சூப்பர் ஹிட் அடித்து, அதன் பிறகு டாப் நடிகையின் லிஸ்டில்முதல் இடத்தை ராஷ்மிகா மந்தனா பிடிக்கப் போகிறார்.
Also Read: ராஷ்மிகா பக்கம் போக பயப்படும் தயாரிப்பாளர்கள்.. நியாயமே இல்லாமல் உயர்த்திய சம்பளம்
இதனால் முன்கூட்டியே தன்னுடைய சம்பளத்தை ஒரு கோடியிலிருந்து 4 கோடியாக உயர்த்தி அடுத்தடுத்த படங்களுக்காக தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களை தயக்கம் அடைய வைத்திருக்கிறார்.
தற்போது ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டிலும் அமிதாப்பச்சனுடன் இணைந்து ‘குட்பை’ என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கிறார். இந்த படம் அக்டோபர் 7-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.
Also Read: ஏர்போர்ட்டில் பதறிப்போன ராஷ்மிகா மந்தனா.. இதுக்கு கூடவா பயம்!