செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

டாக்டருடன் ரகசியமாக நடந்த 2ம் திருமணம்.. அம்பலமான நடன இயக்குனரின் அந்தரங்க லீலை

கோலிவுட், பாலிவுட் என்று பிரபலமாக இருக்கும் அந்த நடிகர் நடனத்தில் கை தேர்ந்தவர். நடிப்பு, டைரக்ஷன் என்று ஒரு ரவுண்டு வந்த இவர் தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவருடைய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கிறது.

இப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவர் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகையை கண்மூடித்தனமாக காதலித்த நடிகர் அதற்காக தன் மனைவியை கூட விவாகரத்து செய்தார். பிறகு நடிகையுடன் திருமணம் வரை சென்ற இவர் சில காரணங்களால் அவரை கழட்டி விட்டார்.

Also read: ஓவர் அலப்பறை பண்ணும் சில்வண்டு.. கெரியரே ஆரம்பிக்கல அதுக்குள்ள இப்படியா!

இது திரையுலகில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. போதாத குறைக்கு நடிகையும் நடிகரின் மேல் தீராத கடுப்பில் இருந்தார். இதையெல்லாம் கண்டு கொள்ளாத நடிகர் சில காலங்கள் பாலிவுட்டில் படம் இயக்குவதில் பிஸியாக இருந்தார். தற்போது மீண்டும் கோலிவுட்டிற்கு திரும்பி இருக்கும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் நடிகரின் ரகசிய திருமணம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. அதாவது பல மாதங்களாகவே நடிகர் வடநாட்டைச் சேர்ந்த டாக்டர் ஒருவரை உருகி உருகி காதலித்திருக்கிறார். ஒரு ட்ரீட்மென்ட்டுக்காக டாக்டரை சந்திக்க போன நடிகருக்கு திடீர் காதல் ஏற்பட்டிருக்கிறது.

Also read: 2வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்த குடும்பம்.. பழிவாங்க புது அவதாரம் எடுக்கும் நடிகர்

ரகசியமாக தங்கள் காதலை வளர்த்து வந்த அந்த ஜோடி திருமணத்தையும் ரகசியமாகவே நடத்தி முடித்திருக்கின்றனர். எக்காரணம் கொண்டும் இந்த விஷயம் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் நடிகர் தன் மனைவியுடன் ரகசியமாகவே குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறாராம்.

இருப்பினும் இவர்கள் இருவரும் வடநாட்டில் சுற்றிவரும் போட்டோக்கள் தற்போது மீடியாக்களில் கசிந்து வருகிறது. என்னதான் மூடி மூடி வைத்தாலும் உண்மை ஒருநாள் வெளிச்சத்திற்கு வந்து தானே ஆக வேண்டும். அந்த நிலையில் தான் தற்போது நடிகரும் இருக்கிறார். இவருடைய ரகசிய திருமணம் பற்றி தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also read: அப்பாவை போல் மாசாக என்ட்ரி கொடுக்க துடிக்கும் வாரிசு.. ரகசியமாக நடந்து வரும் பயிற்சி

Trending News