புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

க்ளைமாக்ஸை நோக்கி நகரும் பாரதிகண்ணம்மா.. ஒருவழியா முடிச்சிட்டீங்களா கோடி கும்பிடு

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் தற்போது பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி, கிளைமேக்ஸை நோக்கி சீரியல் சென்று கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக தீவிரவாதிகள் மருத்துவமனையை தங்கள் பிடியில் வைத்திருக்கின்றனர்.

மக்களை காப்பாற்றுவதற்காக ஆர்மி மற்றும் போலீஸ் மருத்துவமனைக்குள் உள்ளே நுழைவதற்காக யாருக்கும் தெரியாத ரகசிய வழியை கண்ணம்மா அவர்களுக்கு கடிதம் மூலம் வெளிப்படுத்தினார். அதன் மூலம் உள்ளே வந்த போலீஸ் அங்கிருக்கும் தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி, பொதுமக்களைக் காப்பாற்றுகின்றனர்.

Also Read: இரு மகள்களுக்கும் வைத்த கெடு.. உண்மையை கக்கிய கண்ணம்மா

அப்போது கண்ணம்மா மட்டும் போலீஸ் அறிவுரையின்படி மருத்துவமனை விட்டு வெளியேறாமல் பாரதியை அடைத்து வைத்திருக்கும் அறைக்குள் சென்று, அவரை காப்பாற்ற நினைக்கிறார். அப்போது பாரதி, கண்ணம்மாவை தன்னிடம் நெருங்கி வர வேண்டாம் என கூறுகிறார்.

ஏனென்றால் அவர் மீது வெடிகுண்டு கட்டப்பட்டிருக்கிறது. இருப்பினும் கண்ணம்மா பாரதியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் இல்லையென்றால் அவருடன் சேர்ந்து செத்துவிடலாம் என்று முடிவுக்கு வந்து அவரை இருக்க கட்டி பிடிக்கிறார்.

Also Read: ஏஜென்ட் டீனா அளவுக்கு குத்திக் கிழித்த கண்ணம்மா.. இது என்னட விக்ரம் படத்திற்கு வந்த சோதனை

இதன்பிறகு மருத்துவமனையில் பயங்கரமான குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. சந்தேகத்தினால் பாரதி-கண்ணம்மா பத்து வருடங்களாக பிரிந்த நிலையில், இருவரும் ஒன்றாக சாவில் ஆவது சேர்ந்து விடட்டும் என்று இந்த சீரியலை முடித்துவிட போகின்றனர்.

இதன் பிறகு ஹேமா-லஷ்மி இருவரை வைத்தே இனி கதை தொடர்கிறது. மேலும் லட்சுமிக்கு ஹேமாவும் கண்ணம்மாவின் மகள் தான், அவரும் தன்னுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர் என்ற உண்மை தெரிந்ததால், இனி இந்த இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாக மாறுவது போன்ற கதைக்களம் கொண்ட பாரதிகண்ணம்மாவின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக போகிறது.

Also Read: பிக் பாஸ் சீசன் 6ல் களமிறங்கும் விஜய் டிவி சீரியல் நடிகை.. கொளுத்திப் போட தயாரான கமல்

Trending News