திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

போலீஸ் கேரக்டரில் அரளவிட்ட 5 கதாநாயகிகள்.. கேப்டனே கூப்பிட்டு பாராட்டிய நடிகை

கதாநாயகிகள் பலர் இப்போது வுமன் சென்ரிக் கதைகளை நோக்கி படையெடுக்கின்றனர். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். வெற்றியும் பெறுகின்றனர். ஆனால் எல்லோராலும் ஈசியாக ஒரு கேரக்டரில் நடித்து விட முடியாது என்றால் அது போலீஸ் கேரக்டர் தான். சில நாயகர்களே தயங்கும் போலீஸ் கேரக்டர்களிலும் நம் கதாநாயகிகள் நடித்து பட்டையை கிளப்பி இருக்கின்றனர்.

விஜயசாந்தி: சினிமா துறையில் ஹீரோக்களுக்கு இணையான பேரும், புகழும் கொண்டவர், அவர்களை விட அதிக சம்பளம் வாங்கியவர் என்றால் அது விஜயசாந்தி தான். விஜயசாந்தி வழக்கமான ஹீரோயின்களில் இருந்து மாறுபட்டு வித்தியாசமான கதைகள், ஆக்சன் படங்கள் என நடித்தவர்.

Also Read: 33 வருடங்கள் ஆகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாத விஜயசாந்தி.. ஜெயலலிதா போலவே இவங்க கூறிய காரணம்

1990ல் இவர் நடித்து தெலுங்கில் வெளியான படம் கர்த்தவ்யம். இந்த படத்திலிருந்து தான் விஜயசாந்திக்கு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்னும் பெயர் வந்தது. இந்த படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ‘வைஜெயந்தி IPS’ என்னும் பெயரில் வெளியானது. கோலிவுட்டில் இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தை பார்த்து விட்டு கேப்டன் விஜயகாந்த், விஜயசாந்தியை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார்.

ஜோதிகா: நடிகை ஜோதிகா முதன் முதலில் நடித்த ஆக்சன் த்ரில்லர் படம் நாச்சியார். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி, தயாரித்து இருந்தார். இந்த படத்தில் ஜோதிகா அசிஸ்டன்ட் கமிஷனராக மிரட்டி இருப்பார். ஜோதிகாவுடன் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்திருந்தார். 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படம் வர்த்தக ரீதியாக வெற்றியடைந்தது.

அனுஷ்கா ஷெட்டி: 2018 ஆம் ஆண்டு வெளியான பாகமதி திரைப்படத்தில் அனுஷ்கா போலீசாக நடித்திருந்தார். ஆக்சன் மற்றும் திகில் நிறைந்த திரைப்படம் இது. இந்த படத்தை G அசோக் இயக்கி இருந்தார். வி. வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய ஹிட் படம் ஆனது. ஸ்ரீதேவிக்கு பிறகு பாக்ஸ் ஆபிசில் அதிக வசூல் செய்த நாயகியாக அனுஷ்கா பெயர் வந்தது.

Also Read: சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகத்தை மிஸ் செய்த அனுஷ்கா.. ஆர்யா படத்தால் வந்த கெட்ட நேரம்

நயன்தாரா: இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனா திரைப்படம் இமைக்கா நொடிகள். ஆக்சன் த்ரில்லர் நிறைந்த இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். நயன்தாராவுடன் விஜய் சேதுபதி, அதர்வா,அனுராக் காஷ்யப், ராஷி கன்னா ஆகியோர் நடித்திருந்தனர்.

சினேகா: 1990 ஆம் ஆண்டு விஜயசாந்தி தெலுங்கில் நடித்த கர்த்தவ்யம் படத்தின் ரீமேக் தான் பவானி. இந்த படத்தில் விஜயசாந்தி கேரக்டரில் சினேகா நடித்திருந்தார். அசிஸ்டன்ட் கமிஷனராக சினேகா இந்த படத்தில் வருவார். சீயான் விக்ரமின் சாமி பட வில்லன் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இந்த படத்தில் சினேகாவுக்கு வில்லனாக நடித்திருப்பார்.

Also Read:  சினேகா ஏமாற வாய்ப்பே இல்லை.. இதுல ஏதோ உள்குத்து இருக்கு

Trending News