திரையுலகில் டாப் நடிகராக வலம் வரும் அந்த நடிகருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தாமல் பல துறைகளிலும் ஆர்வம் காட்டி வரும் அவர் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக தான் இருக்கிறார்.
தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அந்த நடிகர் நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஜாலியாக ரைடு போய்க் கொண்டிருக்கிறார். அதுதான் தற்போது இணையதளத்தில் அதிக அளவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களிடம் இயல்பாக பழகும் அவர் சமீபத்தில் சென்று வந்த பயணம் அவர் வீட்டில் ஒரு பஞ்சாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Also read:அப்பாவை போல் மாசாக என்ட்ரி கொடுக்க துடிக்கும் வாரிசு.. ரகசியமாக நடந்து வரும் பயிற்சி
நடிகரை உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட அவருடைய மனைவி கணவர் சென்று வந்த இந்த பயணத்தால் ரொம்பவும் வருத்தத்தில் இருக்கிறாராம். ஏனென்றால் நடிகர் உடன் நடிக்கும் அந்த பக்கத்து தேச நடிகையையும் அழைத்துக் கொண்டுதான் அந்த பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்.
அந்த போட்டோக்கள் அனைத்தும் வெளியாகி வைரலானது. அதை பார்த்த நடிகரின் மனைவி தற்போது பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறாராம். நடிகரின் ரேஸ் திறமையை பற்றி அனைவருக்கும் தெரியும். அதை பற்றி கூறிய மனைவி உடன் வந்த நடிகைக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் என்ன செய்வது, எதற்காக இப்படி ரிஸ்க் எடுக்கிறீர்கள் என்று கணவரை கடிந்து கொண்டாராம்.
Also read:எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்.. பெரிய அந்தஸ்துள்ள நடிகைகளை கிழித்து எரியும் பஜாரி நடிகை
நடிகர் எவ்வளவோ சமாதானப்படுத்தி பார்த்தும் மனைவிக்கு வருத்தம் போகவில்லையாம். அதன் பிறகு சம்பந்தப்பட்ட நடிகையே அவருக்கு போன் செய்து அந்த பயண அனுபவத்தை பற்றி மணி கணக்கில் கூறியிருக்கிறார். அதோடு எனக்கு எந்த பயமும் இல்லை என்று கூறி சமாதானப்படுத்தி இருக்கிறார்.
அதன் பிறகு தான் நடிகரின் மனைவிக்கு உயிரே வந்ததாம். நடிகருக்கு இது போன்ற ரேஸ் எல்லாம் புதுசு கிடையாது. உடன் வந்த நடிகைக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற வருத்தம் தான் மனைவிக்கு பெரிதாக இருந்ததாம். இருப்பினும் மனைவிக்கு நடிகரின் மேல் இருக்கும் பொசசிவ் தான் இப்படி கோபப்பட காரணம் என்று திரை உலகில் கிசுகிசுக்கின்றனர்.
Also read:மூணு புருஷன், அந்தரங்க டிவி நிகழ்ச்சி.. அம்பலத்திற்கு வந்த 40 வயது நடிகையின் வண்டவாளம்