ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

எதிர்பார்ப்பை கிளப்பி தோல்வியடைந்த 6 கேங்ஸ்டர் படங்கள்.. டைட்டிலால் விஜய்க்கு வந்த சிக்கல்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கேங்ஸ்டர் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அது போன்ற கதைகளுக்கு அவர்கள் எப்போதுமே நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் ஏனென்றால் நிஜ வாழ்வில் ஒரு பிரச்சனையை தட்டி கேட்பது என்பது முடியாத விஷயம்.

அதையே சினிமாவில் ஹீரோ செய்யும் போது பலரும் அதை வரவேற்க தான் செய்கின்றனர். ஆனால் அத்தகைய திரைப்படங்களை ரசிகர்கள் ரசித்தாலும் அவையெல்லாம் வசூலில் பெரிய அளவில் கல்லா கட்டுவது கிடையாது. அந்த வகையில் படு தோல்வி அடைந்த ஆறு கேங்ஸ்டர் திரைப்படங்கள் பற்றி இங்கு காண்போம்.

Also read : தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கும் பாலா.. ஆர்யாவை தொடர்ந்து மாட்டிக் கொண்ட சூர்யா

ரஜினி-காலா: பா ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மும்பை தாராவி பகுதியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டது.

ஏற்கனவே ரஜினிகாந்த் நடிப்பில் பல கேங்ஸ்டர் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றிவாகை சூடி இருக்கிறது. அந்த லிஸ்டில் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் பெறவில்லை. அந்த வகையில் இந்த திரைப்படம் ஒரு தோல்வி படமாக இருக்கிறது.

விஜய்-தலைவா: ஏ எல் விஜய்யின் இயக்கத்தில் விஜய், அமலாபால் போன்ற பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மும்பை பகுதியில் எடுக்கப்பட்டது. அதில் விஜய் அந்தப் பகுதி மக்களுக்கு தலைவராக இருப்பார்.

குறிப்பிட்ட தேதியில் வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் அரசியல் பிரச்சினையின் காரணமாக சில சிக்கலை சந்தித்தது. அதற்கு முக்கிய காரணம் அப்போது விஜய் அரசியலுக்கு வரும் ஆசையில் இருந்ததாகவும், அதனால் தான் இப்படி ஒரு தலைப்பு படத்திற்கு வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதுவே படத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக அமைந்தது. படத்தை திரையிட்டால் பிரச்சனை செய்வோம் என்று சிலர் போர் கோடி தூக்கினர். அதன் பிறகு எப்படியோ இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் பெறவில்லை.

Also read : இணையத்தில் அடித்துக்கொள்ளும் விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள்.. இப்படியெல்லாமா அசிங்கப்படுத்துறது

அஜித்-ஜனா: 2004 ஆம் ஆண்டு ஷாஜி காளிதாஸ் இயக்கத்தில் அஜித், சினேகா நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்து எடுக்கப்பட்ட இந்த படம் மும்பை பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. மிகப்பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படம் மோசமான தோல்வியை தழுவியது.

சூர்யா-அஞ்சான்: லிங்குசாமி இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு சூர்யா, சமந்தா ஆகியோரின் நடிப்பில் இப்படம் வெளியானது. அதில் சூர்யா ராஜு பாய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனாலும் படம் பெரிய அளவில் வசூல் லாபம் பார்க்கவில்லை. அந்த வகையில் இந்த படமும் ஒரு தோல்வி படம்தான்.

தனுஷ்-ஜகமே தந்திரம்: 2021 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கேங்ஸ்டர் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால் பெரிய அளவில் ரசிகர்களை தவறாமல் இப்படம் தனுசுக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது.

விக்ரம்-மகான்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க ஆக்ஷன் கலவையாக வெளிவந்த இந்த திரைப்படம் மோசமான தோல்வியை பெற்றது.

Also read : செட் ஆகாத கேரக்டரில் நடித்து மூக்குடைந்த 5 ஹீரோக்கள்.. விஜய் சேதுபதிக்கு அடித்த லக்

Trending News