ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களின் கனவு தேவதையாக இருந்தவர்தான் நடிகை தேவயானி. பக்கத்து வீட்டுப் பெண் போல் இருக்கும் தோற்றமும், குடும்ப பாங்கான கதாபாத்திரமும் அவரை முன்னணி இடத்திற்கு கொண்டு சென்றது. ஆனால் புகழின் உச்சியில் இருக்கும் போதே அவர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவருடைய காதலிக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர் வீட்டின் சுவர் ஏறி குதித்து திருமணம் செய்து கொண்டது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவர் தன் பிறந்த வீட்டு சொந்தங்களுடன் எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் இருந்தார்.
சில வருடங்களில் அவையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் அவர்கள் சகஜமாக பழக ஆரம்பித்தனர்? ஆனால் இன்று வரை தேவயானியின் தம்பி நடிகர் நகுல் அவர்களிடம் சரிவர பேச மாட்டாராம். தன் அக்கா செய்த தவறை மறந்து தேவயானியிடம் பேசும் நகுல் அக்கா கணவரிடம் முகம் கொடுத்து கூட பேச மாட்டாராம்.
அவ்வளவு ஏன் இன்று வரை நகுல் தேவயானியின் கணவரிடம் ஒரு வார்த்தை கூட பேசியதே கிடையாதாம். அதை தற்போது ஒரு பேட்டியில் ராஜகுமாரன் மனம் திறந்து கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் நகுல் இந்த அளவுக்கு தன்னிடம் வெறுப்பை காட்டுவதற்கு ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யாவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஏனென்றால் நகுல், லதா ரஜினிகாந்த் நடத்தி வந்த பள்ளியில் தான் படித்தாராம். அப்போதிலிருந்தே அவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். தேவயானி இப்படி வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட பொழுது அவர்கள் நகுலை கிண்டல் செய்து பேசியிருக்கலாம்.
சிறு பையனாக இருந்த நகுலுக்கு அந்த வார்த்தை மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அதனால்தான் அவர் என்னிடம் இதுவரை பேசாமல் ஒதுக்கி வைத்திருக்கிறார் என்று அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். தேவயானிக்கு திருமணம் முடிந்து இரண்டு வளர்ந்த பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இருப்பினும் இத்தனை வருடங்களாக அக்கா கணவரை நகுல் ஒதுக்கி வைத்திருப்பது திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகுல் தன் கணவரை இப்படி ஒதுக்கி வைத்திருக்கும் படியால் தேவயானியும் தன் பிறந்த வீட்டை விட்டு சற்று ஒதுங்கியே இருப்பதாகவும் கூறுகின்றனர்.