1. Home
  2. சினிமா Buzz

பிரபல தயாரிப்பாளரை வளைத்துப் போட்ட நடிகை.. இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு

பிரபல தயாரிப்பாளரை வளைத்துப் போட்ட நடிகை.. இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு

துவாக சில ஹீரோயின்கள் தங்களது மார்க்கெட் இழந்தவுடன் தொழிலதிபர் அல்லது தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் கூட சீரியல் நடிகை ஒருவர் பிரம்மாண்ட தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து தற்போது மார்க்கெட் உள்ள ஒரு நடிகை தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மிகக் குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை தன்னுடன் படத்தில் நடித்த நடிகர் மீது காதல் வயப்பட்டார். அதன் பின்பு இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக சென்ற இவர்களது வாழ்க்கையில் புயலாக ஒரு பிரச்சனை வந்தது. அதாவது படத்தில் அதிகம் கவர்ச்சி காட்டக்கூடாது என நடிகையின் கணவர் குடும்பத்தினர் சொல்லி உள்ளனர். அதுமட்டுமின்றி நடிகையை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி வற்புறுத்தி உள்ளனர். ஆனால் அந்த நடிகையோ சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் வந்துள்ளார். இதனால் தினமும் இந்த பிரச்சனை வெடிக்க ஒரு கட்டத்தில் நடிகை விவாகரத்து செய்ய முடிவெடுத்தார். அதேபோல் அந்த நடிகைக்கு விவாகரத்து ஆனவுடன் மார்க்கெட் உச்சத்தை அடைந்தது. இதற்கு காரணம் நடிகையின் கவர்ச்சி தான் என கூறப்பட்டது. மேலும் அவ்வப்போது செய்தித்தாள்களில் மீண்டும் நடிகை தனது முதல் கணவனோடு இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது பிரபல தயாரிப்பாளர் ஒருவருடன் நடிகை நெருங்கமாக பழகி வருகிறாராம். மேலும் நடிகையின் கண்டிஷனுக்கு தயாரிப்பாளர் ஒத்துக்கொண்டதால் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் இன்னும் சில நாட்களில் வெளியே வரும் என எதிர்பார்க்கலாம்.
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.