ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ஒரே படத்தால் நண்பனை ஓவர் டேக் செய்த ஹீரோ.. போட்டியை சமாளிக்க முடியாமல் திணறும் பிரபலம்

சினிமாவை பொருத்தவரை போட்டி என்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால் பிரபல நடிகர் ஒருவர் தற்போது அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளி முன்னேறி இருப்பதுதான் கோடம்பாக்கத்தின் முக்கிய செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக இரண்டு மூன்று ஹிட் படம் கொடுத்து விட்டாலே அந்த நடிகரை பாக்ஸ் ஆபிஸ் கடவுள் ரேஞ்சுக்கு திரையுலகினர் உயர்த்தி விடுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அத்தனை பேரையும் ஓரம் கட்டி முன்னேறி இருக்கும் இந்த ஹீரோவை பார்த்து தான் அனைத்து நடிகர்களும் உறைந்து போயிருக்கின்றனர்.

Also read:சினிமா ஆசையால் அட்ஜஸ்ட்மென்ட் செய்த டிக்டாக் கவர்ச்சி புயல்.. நம்ப வைத்து ஏமாற்றிய இயக்குனர்

பல வருடங்களாக சினிமா பக்கம் வராமல் அரசியல் பக்கமே கவனம் செலுத்தி வந்தார் அந்த நடிகர். திடீரென்று ஒரு திரைப்படத்தின் மூலம் அவர் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதை பலரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் போகப் போக படம் வெளிவருவதற்கு முன்பே செய்யப்பட்ட விளம்பரமும், ரிலீசுக்கு பின்னர் பெற்ற சாதனையும் பலரையும் வாயடைத்து போக செய்தது.

தாறுமாறாக வெற்றி பெற்ற அந்த திரைப்படத்தால் நடிகர் தன்னுடைய சம்பளத்தை தற்போது இரண்டு அல்ல, இரண்டு அல்ல பல மடங்காக உயர்த்தி விட்டாராம். இப்போது திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் இவர்தான் என்று கூறுகின்றனர். அந்த அளவுக்கு அவர் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்திற்காக சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.

Also read:விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட டாப் நடிகை.. சத்தம் இல்லாமல் நடக்கும் சிகிச்சை

இதுவரை திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை பெற்றிருந்த சூப்பர் நடிகருக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. தன் நண்பனே தனக்கு இப்படி போட்டியாக மாறுவார் என்று எதிர்பார்க்காத அந்த நடிகர் சற்று திணறித்தான் போயிருக்கிறார்.

அதனாலேயே அவர் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தை வரலாறு காணாத அளவுக்கு வெற்றி படமாக கொண்டு வர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். இப்போது நண்பர்கள் இருவருக்கும் நடக்கும் இந்த மறைமுக பனிப்போர் பற்றி தான் திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Also read:அந்தரங்க உறவில் கல்லாக்கட்டும் சின்னத்திரை நடிகைகள்.. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா? லிஸ்ட்ட கேட்டாலே தல சுத்துது

Trending News