புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நக்கல், நையாண்டியை வைத்து மணிவண்ணனின் 6 படங்கள்.. சத்யராஜை வைத்து இத்தனை ஹிட் படங்கள்

மணிவண்ணன் பல படங்களில் குணச்சித்திரம், வில்லன், காமெடி, போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் மணிவண்ணன் இயக்கியுள்ளார். அதில் நக்கலும் நையாண்டியையும் வைத்து இயக்கிய 6 படங்களை பார்க்கலாம்.

அமைதிப்படை : மணிவண்ணன், சத்யராஜ் கூட்டணியில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான அமைதிப்படை படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை தோலுரித்து இப்படம் காட்டியிருந்தது.

Also Read :எம்ஜிஆரின் கொள்கையை மாற்றிய மணிவண்ணன்.. சூட்டிங் ஸ்பாட்டில் உருவான புது ட்ரெண்ட்

சின்னதம்பி, பெரியதம்பி : பிரபு, சத்யராஜ் கூட்டணிகள் வெளியாகி ரசிகர்களை வயிறு குலுக்க சிரிக்க வைத்த படம் சின்னதம்பி பெரிய தம்பி. இப்படத்தில் நதியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான இப்படம் 150 நாட்களை தாண்டி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ : மணிவண்ணன், சத்யராஜ் கூட்டணியில் மாபெரும் வரவேற்பு பெற்ற அமைதிப்படை படத்தின் இரண்டாம் பாகம் நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ. இது மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான 50வது படமாகும்.

Also Read :மணிவண்ணன் இயக்கத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 6 படங்கள்.. மாஸ் பண்ணிருக்காரு மனுஷன்

தெற்கு தெரு மச்சான் : மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், பானுப்பிரியா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தெற்கு தெரு மச்சான். இந்த படமும் முழுக்க முழுக்க நகைச்சுவை ஜானரில் எடுக்கப்பட்டது. சொல்லப்போனால் கவுண்டமணி, சத்யராஜ் காமினேஷனரில் வரும் காமெடி அல்டிமேட் ஆக இருக்கும்.

கல்யாண கச்சேரி : மணிவண்ணன் இயக்கத்தில் அர்ஜுன், செந்தில், சின்னி ஜெயந்த் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கல்யாண கச்சேரி. இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read :மணிவண்ணன் இயக்கத்தில் ஒரே நாளில் வெளிவந்த 2 சத்யராஜ் படங்கள்.. இரண்டுமே 100 நாட்களை தாண்டி சாதனை!

புது மனிதன் : மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், பானுப்ரியா, சரத்குமார் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வெளியான திரைப்படம் புது மனிதன். இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தையும் நக்கல், நையாண்டி உடன் எடுத்திருந்தார் மணிவண்ணன்.

Trending News