சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

புருஷன் கல்யாணத்துக்கு பொண்டாட்டி சமையல்.. பிரமாதம்! கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய கோபி

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் கோபி, ராதிகாவின் ரிசப்ஷன் நடைபெற்று வருகிறது. இதனால் டின்னருக்கு தேவையான உணவுகளை பாக்யா தடபுடலாக சமைத்து வருகிறார். அந்த சமயத்தில் மயூ பாக்யாவை பார்த்து ஓடி வருகிறார்.

அப்போது மயூ சொன்ன பிறகு தான், கோபி கல்யாணத்துக்கு தான் சமைக்க வந்துள்ளோம் என்பது பாக்யாவிற்கு தெரிய வருகிறது. இந்த விஷயத்தை கேட்டு பாக்கியா ஒரு நிமிடம் ஆடிப் போனாலும், அதன் பின்பு தனது மனசை இரும்பாக்கி கொண்டு இந்த திருமணத்திற்கு சமைக்க முயற்சிக்கிறார்.

Also Read : பெரிய மைனாவுக்கு வலை விரித்த பிக்பாஸ் டீம்.. தானாக சிக்கிய சின்ன மைனா

இந்நிலையில் தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார் கோபியின் தந்தை. பாக்யா சமைக்கும் திருமண மண்டபத்தில் தான் கோபியின் திருமணம் நடக்கிறது என்பதை அறிந்து அவரது தந்தை அங்கு வருகிறார்.

காலம் போன காலத்துல இப்படி கல்யாண கோலத்தில் வந்து நிக்கிற, உனக்கு வெட்கமா இல்ல, இப்படி எல்லோரையும் அழ வச்சிட்டு நீ மட்டும் எப்படி சந்தோஷமா இருப்ப என கோபியை கண்டபடி திட்டுகிறார் ராமமூர்த்தி. இந்த கல்யாணத்தை நடத்த விடமாட்டேன் என கோபி தந்தை கூறுகிறார்.

Also Read : ரவீந்தர் கையில் செருப்பை கொடுத்த விஜய் டிவி.. ட்ரெண்டிங் ஜோடியை கூப்பிட்டு கேவலப்படுத்திய சம்பவம்

உடனே கோபி வெளியே போயா என அவரது அப்பாவையே கழுத்தைப் பிடித்து தள்ளி விடுகிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாக்யா ஏன் மாமா இங்க வந்தீங்க என அவரை சமையல் செய்யும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். மேலும், நீங்க வீட்டுக்கு போங்க மாமா என பாக்யா கூறுகிறார்.

இன்னும் இங்கே இருக்கணுமா வா பாக்யா என அவரது மாமா கூப்பிட்டும், எனக்கு இருக்க ஒரே நம்பிக்கை இந்த காண்ட்ராக்ட் மட்டும்தான் மாமா, நீங்க போங்க நான் வந்துடறேன் என பாக்யா கூறுகிறார். என்னதான் கோபி ராதிகா மீது காதல் மயக்கத்தில் இருந்தாலும் தனது தந்தையே தள்ளிவிடும் அளவுக்கு இவ்வளவு சுயநலமாக இருப்பார் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

Also Read : மண்டபத்திற்கு ஜோடியாக வந்த கோபி-ராதிகா.. பரபரப்பை ஏற்படுத்திய பாக்யா

- Advertisement -spot_img

Trending News