திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜெயம் ரவிக்கு மட்டும் ரெண்டு கொம்பா.. முடியவே முடியாது என மறுத்த மணிரத்தினம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். ராஜராஜ சோழன் என்று மக்களால் புகழப்படும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி ஒரு கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அவருக்கு மக்களிடம் இருந்து எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் இருக்கிறது. இதை அவரே பல முறை பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Also read : டாப் இயக்குனர்களை வளர்த்துவிட்ட குருக்கள்.. கமல்ஹாசனிடம் வேலை செய்த ஜெயம் ரவி

அந்த வகையில் பொன்னியின் செல்வன் வெளியாவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் தான் இருக்கிறது. அதனால் ஜெயம் ரவி மணிரத்னம் மற்றும் லைக்கா ப்ரோடக்ஷனிடம் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். அது என்னவென்றால் இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஜெயம் ரவியின் குடும்பம் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களாம்.

ஒவ்வொரு நடிகருக்கும் இது போன்ற ஆசை இருப்பது இயல்புதான். அதுவும் இப்படி ஒரு வரலாற்று கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவியை திரையில் காண அவருடைய குடும்பம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

Also read : ஜெயம் ரவி கேரக்டருக்கு இப்படி ஒரு டிவிஸ்ட்டா.. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இருக்கும் சஸ்பென்ஸ்

இதைப் பற்றி மணிரத்தினத்திடம் கூறிய ஜெயம் ரவி தனக்காக ஒரு ஷோ ஒதுக்கி கொடுக்குமாறு கேட்டிருக்கிறார். ஆனால் அந்த வேண்டுகோளுக்கு மணிரத்தினம் முடியாது என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் இவர் ஒருவருக்கு மட்டும் தனியாக சலுகை கொடுத்து விட முடியாது என்ற காரணம்தான்.

இருப்பினும் ஜெயம் ரவி வருத்தப்படக்கூடாது என்பதற்காக குரோம்பேட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் பாதி டிக்கெட்டுகளுக்கும் மேல் ஜெயம் ரவிக்காக வாங்கி கொடுத்துள்ளார். இந்த அளவிற்காவது மணிரத்தினம் இறங்கி வந்திருக்கிறாரே என்று ஜெயம் ரவியும் அதை ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் படம் ரிலீஸ் ஆகும் முதல் நாள் தன் குடும்பத்துடன் பொன்னியின் செல்வனை காண்பதற்காக அவர் ஆர்வத்துடன் காத்திருக்கிறாராம்.

Also read : பொன்னியின் செல்வனுக்கு மணிரத்னம் போட்ட அதிரடி கண்டிஷன்.. அவர் படத்துக்கு மட்டும் இப்படி செய்வது நியாயமா?

Trending News