செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

கௌதம் வாசுதேவ் மேனன் நாசமாக்கிய 5 படங்கள்.. அந்தப் படத்திற்கும் காத்திருக்கும் ஆப்பு

பிரபல இயக்குனராக இருக்கும் கௌதம் மேனன் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி வெற்றி இயக்குனராக வலம் வந்தாலும் அவர் சொதப்பிய சில திரைப்படங்களும் இருக்கின்றன. அந்த வகையில் கௌதம் வாசுதேவ் மேனன் நாசமாக்கிய ஐந்து திரைப்படங்கள் பற்றி இங்கு காண்போம்.

நடுநிசி நாய்கள் வீரா, சமீரா ரெட்டி ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக வெளிவந்தது. பெண்களை கடத்தி துன்புறுத்தும் நாயகனிடம் ஹீரோயின் மாட்டிக்கொண்டு எப்படி மீள்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. பார்வையாளர்கள் முகம் சுளிக்கும் படி பல காட்சிகள் இருந்தபடியால் இந்த திரைப்படத்திற்கு சில மோசமான விமர்சனங்களும் எழுந்தது. அதனால் இப்படம் ஒரு தோல்வி படமாக அமைந்தது.

Also read:கௌதம் மேனனுக்கு பைக், சிம்புக்கு என்ன தெரியுமா?. வாரி வழங்கும் ஐசரி கணேஷ்

நீதானே என் பொன்வசந்தம் ஜீவா, சமந்தாவின் நடிப்பில் முழுக்க முழுக்க ரொமான்ஸ் கலந்த காதல் கதையாக இப்படம் வெளிவந்தது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தாலும் இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

என்னை நோக்கி பாயும் தோட்டா தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார், சுனைனா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இப்படம் ஆக்சன் திரில்லர் திரைப்படம் ஆகும். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

Also read:16 வருடங்களுக்குப் பின் இணையும் கமல், கௌதம் மேனன் கூட்டணி.. வேட்டையாடு விளையாடு 2 கதை இதுதான்

ஜோஸ்வா இமைப்போல் காக்க பிக் பாஸ் வருண், கிருஷ்ணா ஆகியோரின் நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆக வேண்டிய இந்த திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. லண்டனில் இருந்து சென்னைக்கு வரும் ஒரு பெண்ணை பாதுகாக்கும் பாடிகார்ட் பற்றிய கதைதான் இப்படம். சில பல தடைகளால் தள்ளிப் போடப்பட்ட இந்த திரைப்படம் இப்போது வரை கிடப்பில் கிடக்கிறது.

துருவ நட்சத்திரம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தான் இந்த துருவ நட்சத்திரம். விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த திரைப்படம் சில பிரச்சனைகளின் காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்த திரைப்படம் வெளிவந்தால் நிச்சயம் சொதப்பிவிடும் என்ற ஒரு கருத்தும் இப்போது நிலவி வருகிறது.

Also read:சக்சஸ் மீட்டில் கடுப்பேற்றிய கௌதம் மேனன்.. பழசை மறந்து பேசிய ஆணவப் பேச்சு

Trending News