திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

OTT-யில் விலை போகாமல் காத்திருக்கும் 4 படங்கள்.. எவ்வளவு அடி விழுந்தாலும் அசராத அண்ணாச்சி

சமீபகாலமாக திரையரங்குகளில் வெளியான படங்கள் ஓடிடியிலும் நல்ல விலைக்கு போகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் ஓடிடியிலும் நல்ல லாபத்தை பெற்று தந்தது. படம் சரியாக ஓடாததால் ஓடிடியில் விலை போகாமல் இன்னும் நான்கு படங்கள் காத்திருக்கின்றது.

தி லெஜண்ட் : சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி முதல் முறையாக கதாநாயகனாக களம் இறங்கிய படம் தி லெஜண்ட். இப்படத்தில் ஊர்வசி ராவ்டேலா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். திரையரங்குகளில் ஒரு அளவு நல்ல வசூலை பெற்றாலும் ஓடிடியில் தற்போது வரை விலை போகாமல் உள்ளது.

Also Read :ஜிம் ஒர்க் அவுட் செய்து யூத்தாக மாறிய தி லெஜண்ட் அண்ணாச்சியின் புகைப்படம்.. அடுத்த படத்தின் அவதாரம்!

கேப்டன் : சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, சிம்ரன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கேப்டன். இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். இப்படம் போட்ட பட்ஜெட் கூட எடுக்க முடியவில்லை. ஆனால் மிக மலிவு விலைக்கு ஜீ5 ஓடிடி தளம் பெற்றது.

இரவின் நிழல் : பார்த்திபன் இயக்கத்தில் சிங்கள் சாட்டில் எடுக்கப்பட்ட படம் இரவின் நிழல். இப்படத்தில் பிரிகிதா, வரலட்சுமி சரத்குமார், ரேகா நாயர் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பல பிரபலங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை இந்த படம் ஓடிடியில் விலை போகாமல் உள்ளது.

Also Read :நீ ஏண்டி என் காலத்துல இல்லாம போன.. பாரதிராஜாவை ஏங்க வைத்த இரவின் நிழல் நடிகை

கோப்ரா : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் விக்ரம் பல கெட்டப்பில் நடித்து வெளியான திரைப்படம் கோப்ரா. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிய மோசமான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படத்தை ஓடிடி நிறுவனங்கள் வாங்க தயக்கம் காட்டி வருகிறது.

Also Read :தோல்வி பயத்தை மறைமுகமாக காட்டிய வலிமை, கோப்ரா.. வெற்றிக்காக கௌதம் மேனன் போட்ட பிளான்

Trending News