அடேங்கப்பா முகத்தை பார்த்து அஞ்சு மாசம் ஆச்சு.. வெளிவராமல் இருக்கும் விஜய் சேதுபதியின் 2 படங்கள்

விஜய் சேதுபதி தற்போது பாலிவுட் பட வேளையில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. வருஷத்திற்கு எப்படியும் விஜய் சேதுபதியின் படங்கள் குறைந்தபட்சம் ஆறு படங்களாவது வெளியாகிவிடும்.

ஏனென்றால் நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு தன்னை கால்சூட் கேட்டு வரும் இயக்குனர்களிடம் எல்லா படங்களுக்குமே விஜய் சேதுபதி ஓகே சொல்லி விடுவாராம். அதனால் தான் விக்ரம் படத்தில் செம மாஸ் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி அதற்கு அப்படியே ஆப்போசிட்டாக மாமனிதன் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது கோலிவுட்டிலேயே பல படங்களை கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி பாலிவுட்டிலும் மூன்று, நான்கு படங்களில் கமிட்டாகி உள்ளார். இப்படி தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக 5 மாதங்களில் எந்த படம் வெளியாகவில்லை.

அதிலும் விஜய் சேதுபதி நடித்த முடித்தும் வெளிவராமல் இரண்டு படங்கள் காத்துக்கொண்டிருக்கிறது. முதலாவதாக யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர்கள் மோகன் ராஜா, மகிழ் திருமேனி, கரு பழனியப்பன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. அதேபோல் விஜய் சேதுபதி நடித்துள்ள மற்றொரு படம் இடம் பொருள் ஏவல்.

விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குனரான சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பல நடிப்பில் இடம் பொருள் ஏவல் படம் உருவானது. இந்த படத்தின் படப்பிடிப்பு 2014 இல் முழுமையாக முடிவற்றும் தற்போது வரை இந்த படம் வெளியாகாமல் உள்ளது.