சினிமாவில் பட வாய்ப்புகளை தேடி வரும் பல இளம் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இது தற்போது அதிகமாகிவிட்ட நிலையில் வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை சிலர் பலவந்தப்படுத்தி கொடுமை செய்யும் கதையும் இருக்கிறது.
அப்படித்தான் பட வாய்ப்பு கேட்டு பிரபல நடிகரை சந்திக்க சென்ற ஒரு புதுமுக நடிகைக்கு யாரும் எதிர்பாராத ஒரு கொடூரம் நடந்துள்ளது. தன்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த இளம் பெண்ணை வாய்ப்பு கொடுக்கிறேன் என்று நம்ப வைத்து ஒரு நைட் பார்ட்டிக்கு வரச் சொல்லி இருக்கிறார் அந்த பிரபல நடிகர்.
Also read:பக்கா பிளான் போட்டு சாதித்த இயக்குனர்.. ஏமாந்து போன பெரிய இடம்
இளம் நடிகராக ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கும் அந்த நடிகருக்குள் இப்படி ஒரு மறுமுகம் இருக்கிறதா என்று பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி பார்ட்டிக்கு வந்த அந்த இளம் பெண்ணுக்கு அந்த நடிகர் வலுக்கட்டாயமாக போதை மருந்து கொடுத்திருக்கிறார்.
அதனால் சுயநினைவை இழந்த அந்த பெண்ணை நடிகரும் அவருடைய நண்பரும் பலவந்தப்படுத்தி இருக்கின்றனர். பிறகு அந்த பெண்ணுக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் நாட்கள் தான் சென்றதே தவிர அவருக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
Also read:கவர்ச்சியை பாதுகாக்க நம்பர் நடிகை போட்ட ஊசி.. பக்க விளைவால் பறிபோன குழந்தை பாக்கியம்
இதனால் நடிகரை அணுக முயற்சி செய்த அந்த நடிகைக்கு ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது. இதனால் நொந்து போன நடிகை வேறு சில இயக்குனர்களிடமும் வாய்ப்பு கேட்டிருக்கிறார். ஆனால் அங்கும் அவருக்கு இதே போன்ற அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகள் ஏராளமாக நடந்திருக்கிறது.
அதனால் பொங்கி எழுந்த அந்த நடிகை சம்பந்தப்பட்டவர்களின் பெயரை மீடியாவில் வெளியிட்டு பலருக்கும் ஷாக் கொடுத்தார். ஆனாலும் நடிகர்கள் தங்களின் செல்வாக்கை வைத்து நடிகையை ஓரம் கட்டினார்கள். இப்படி எல்லா வகையிலும் முயற்சித்தும் வாய்ப்பு கிடைக்காத அந்த நடிகை தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்.
Also read:விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட டாப் நடிகை.. சத்தம் இல்லாமல் நடக்கும் சிகிச்சை