ஜெயம் ரவி, ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்திலேயே நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். ஆரம்பத்தில் ஜெயம் ரவியின் நடிப்பும், அவரது குரலும் ரசிகர்களை பெருமளவு திருப்திபடுத்தவில்லை.
இந்நிலையில் ஜெயம் ரவிக்கு பல பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. மேலும் பல வருடங்கள் கழித்து தனி ஒருவன் திரைப்படத்தின் மூலமாக ஜெயம் ரவி ரீஎன்ட்ரி கொடுத்து, தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார். இதில் முக்கியமாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இதனிடையே நடிகர் ஜெயம் ரவி தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வரலாற்று திரைப்படமான சங்கமித்ரா திரைப்படத்தை ஜெயம் ரவி மற்றும் ஆர்யாவின் நடிப்பில் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இத்திரைப்படம் வரலாற்று கதை சம்பந்தப்பட்ட திரைப்படம் என்பதால் பட்ஜெட் அதிகம். அப்போதிருந்த ஜெயம் ரவியின் மார்க்கெட்டை கண்ட தயாரிப்பாளர்கள் ஜெயம் ரவி மற்றும் ஆர்யாவை நம்பி இப்படத்தை எடுக்க முடியாது எனவே சங்கமித்ரா திரைப்படத்தை கைவிடுமாறு சுந்தர்சியிடம் கூறினர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பை பார்த்த பல தயாரிப்பாளர்கள் அவரது கால் சீட்டுக்காக தற்போது ஜெயம் ரவியின் வீட்டு வாசலை அணுகி பல பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர். இதில் முக்கியமாக வரலாற்று திரைப்படத்திற்கு ஜெயம் ரவிக்கு வாய்ப்புகள் அதிகம் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் முக்கியமாக சங்கமித்ரா திரைப்படமும் அடங்கி உள்ளது. இந்நிலையில் சங்கமித்ரா திரைப்படத்தை சுந்தர் சி மீண்டும் கையில் எடுத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் சுந்தர் சி தற்போது கலகலப்பு 3 படத்தில் படப்பிடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடத்தி வருகிறார். இத்திரைப்படத்தை முடித்துவிட்டு ஜெயம் ரவி மற்றும் ஆர்யாவின் நடிப்பில் சங்கமித்ரா படத்தை தொடங்குவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசி வருகின்றனர். மேலும் நடிகர் ஆர்யா கேப்டன் திரைப்படத்தில் சமீபத்தில் நடித்திருந்தார்.
இத்திரைப்படம் தோல்வியுற்ற நிலையில், தற்போது மார்க்கெட் உயர்ந்துள்ள ஜெயம் ரவியுடன் கூட்டணி சேர்ந்தால் ஆர்யாவிற்கும் மார்க்கெட் எகிறக்கூடிய வாய்ப்புள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர். மேலும் இயக்குனர் சுந்தர் சி முதன்முறையாக இயக்க போகும் வரலாற்று திரைப்படத்தின் எதிர்பார்ப்பு தற்போதைய ரசிகர்களிடம் அதிகமாகி உள்ளது.