வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பல வருஷம் கஷ்டப்பட்டு வாங்க வேண்டியது.. மூனே எபிசோட்ல எப்படி? லாஜிக் இடிக்குது சந்தியா!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் சிறுவயதிலிருந்து ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்த சந்தியாவிற்கு அவருடைய கணவர் சரவணின் துணையுடன் பல போராட்டத்திற்கு பிறகு தற்போது ஐபிஎஸ் ட்ரைனிங்கிற்க்கு சென்றடைகிறார்.

சந்தியாவிற்கு அவருடைய மாமியார் சிவகாமி உட்பட குடும்பமே உறுதுணையுடன் இருக்கிறது. இந்நிலையில் சந்தியா ஐபிஎஸ் ட்ரெயினிங் தற்போது மாடர்ன் உடையில் மாஸ் காட்டுகிறார். அதன்பிறகு இவர் போலீஸ் கெட்டப்பிலும் தெறிக்க விடுகிறார்.

Also Read : விஜய் டிவியின் டிஆர்பி-யை நொறுக்க சன் டிவி போட்ட பிளான்.. கைகொடுக்குமா தளபதியின் படம்

தன்னுடைய இலட்சிய கனவுக்காக அடியெடுத்து வைத்திருக்கும் சந்தியா அங்கு நடத்தப்படும் போட்டிகளில் எல்லாம் முன்னிலை வகிக்கிறார். இதை கணவர் சரவணன் பார்த்து ஆனந்தத்தில் திளைக்கிறார். மேலும் சரவணன் தன்னுடைய மனைவியின் கனவை சுமந்துகொண்டு அதற்காக அவருடன் பக்கபலமாக இருப்பதால் பெண் அடிமைத்தனம் இந்த காலத்தில் சுத்தமாக கிடையாது என்பதை இந்த சீரியல் வெளிப்படுத்துகிறது.

பல போராட்டத்திற்கு பிறகு ஐபிஎஸ் போலீஸ் உடையில் சந்தியா மாஸ் காட்டியிருப்பது சீரியல் ரசிகர்களை குதுகலப்படுத்துகிறது. இதன்பிறகு ராஜா ராணி2 சீரியல் சூடுபிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்த சீரியல் மாதிரி பெண் கதாப்பாத்திரங்களை வீட்டில் நடக்கும் குழப்பங்களை சரி செய்வது போல் காண்பிக்காமல் பெண் தன் கனவுகள் விருப்பம் அடைய எப்படி போராடுகிறார் என்பதை ராஜா ராணி2 சீரியலில் அழகாக காட்டுகின்றனர்.

Also Read : டிஆர்பிக்காக ராஜ்கிரண் வைத்தெரிச்சலை கொட்டிய பிரபல சேனல்.. விஜய் டிவியை மிஞ்சுடுவாங்க போலயே

இதேபோன்றுதான் ஜீ தமிழில் சத்யா சீரியலில் கதாநாயகியின் கெட்டப் மாறிய பிறகு, அந்த சீரியல் படு சொதப்பலை சந்தித்தது. அப்படி ராஜா ராணி 2  சீரியலும் மாறக்கூடாது என்றும் நினைக்கின்றனர்.

ஆனால் ரியாலிட்டியின் மூன்று வருடம் கஷ்டப்பட்டு வாங்கவேண்டிய ஐபிஎஸ் வேலையை, மூன்று எபிசோடில் வாங்கிட்டு போகும் சந்தியாவை, லாஜிக்கே இல்லாத ராஜா ராணி2 என சீரியலை நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் சரமாரியாக கிண்டல் செய்கின்றனர்.

Also Read : களை கட்டும் பிக் பாஸ் சீசன் 6.. உறுதியான 6 போட்டியாளர்கள்

Trending News