ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

முழுசா மூடி நடிச்ச படங்களை பத்தி யாரும் பேசல.. ரேகா நாயர் ஆவேசம்

பெண்கள் சம்பந்தமான பிரச்சனைகளை முதலில் குரல் கொடுப்பவர் நடிகை ரேகா நாயர். இவர் சமீபத்தில் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார்.

அதிலும் குறிப்பாக நடுரோட்டில் பயில்வான் ரங்கநாதன் உடன் ரேகா நாயர் சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருந்தது. இந்நிலையில் இரவின் நிழல் படத்தில் மேலாடை இன்றி நடித்திருந்தார். இதனால் இவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

Also Read :ஆர்வக்கோளாறால் பறிபோன வாய்ப்பு.. சொதப்பலில் முடிந்த ரேகா நாயர் போட்ட பிளான்

இதைப்பற்றி அவர் பலமுறை தெளிவுபடுத்தி உள்ளார். அதாவது அந்த படத்துக்கு தேவைப்பட்டதால் அந்த காட்சியில் அப்படி நடித்தேன் என ரேகா நாயர் கூறியிருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் ரேகா நாயர் இந்த விஷயம் குறித்து பேசி உள்ளார். அதாவது என்னுடைய முதல் படம் விஷாலின் கதக்களி.

அந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சாதாரணமான ஒன்று. ஒரு நைட்டியை போட்டுக் கொண்டு வந்து டீயை கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். அதன் பின்பு போக்கிரி ராஜா படத்தில் ஒரு பைத்தியக்காரி போல் நடித்திருந்தேன். ஆனால் இதைப் பற்றி எல்லாம் யாரும் பேசவில்லை.

Also Read :என்னை பற்றி பேசினால் செருப்பு பிஞ்சிடும்.. பயில்வானுடன் பீச்சில் மல்லு கட்டிய ரேகா நாயர்

மேலும் இப்படி முழுசா மூடி நடிச்ச போது அந்தப் படங்களைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இரவின் நிழல் படத்தின் நடித்த போது இதைப் பற்றி மக்கள் பெரிய அளவில் பேசினார்கள், இதன் மூலம் அவர்களது மனநிலை எப்படி இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

இது மிகவும் ஒரு மோசமான விஷயமாகும். இரவின் நிழல் படத்தில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரமாக நான் மாறி விட்டேன். அந்தக் காட்சியில் நடிக்க எனக்கு எப்போதுமே தயக்கம் இருந்ததில்லை என்று ரேகா நாயர் கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோ இணையத்தில் பலராலும் பகிரப்பட்ட வருகிறது.

Also Read :3 புருஷனை டீலில் விட்ட டாக்டர் நடிகை.. அந்தரங்க விஷயத்தை போட்டு உடைத்த பயில்வான்

Trending News