வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

படுமோசமான வேலையை பார்த்த அர்ச்சனா.. IPS ட்ரெய்னிங்கில் சிக்கிய சந்தியா

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் சிறுவயதிலிருந்து ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் சந்தியா, தன்னுடைய கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தின் உதவியுடன் ஐபிஎஸ் பரிட்சையில் தேர்வாகி தற்போது ட்ரெய்னிங்கில் இருக்கிறார். அங்கு சந்தியாவை பார்ப்பதற்கு வரும் சரவணனின் அம்மா, அப்பா இருவரும் சந்தியாவிடம் ஒரு சத்தியம் வாங்குகிறனர்.

அதாவது இந்த ட்ரெய்னிங்கில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு கோப்பை வழங்கப்பட்டு சொந்த ஊரிலேயே வேலை பார்க்கும் சலுகையும் அளிக்கப்படும். ஆகையால் சந்தியாவை சிறப்பாக ட்ரெய்னில் செயல்பட்டு சொன்ன மாமியார், அந்தக் கோப்பையையும் அவள்தான் பெற வேண்டும் என்று சத்தியம் வாங்குகிறார்.

Also Read: 900 எபிசோடை கடந்து இழுத்து மூடப்படும் விஜய் டிவி தொடர்.. ஒரு வழியாக எண்டு கார்ட் போட்ட இயக்குனர்

இதனால் கூடுதல் பொறுப்புடன் இருக்கும் சந்தியா எப்படியாவது ட்ரெய்னிங்கில் சிறப்புடன் செயல்பட வேண்டும் என்று அனைத்துப் போட்டிகளிலும் முன்னிலை வகிக்க போராடுகிறார். மறுபுறம் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அர்ச்சனாவிற்கு பிரசவ வலி வருகிறது.

பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததை கேட்டதும் சலிப்படைந்த அர்ச்சனா, படுமோசமான வேலையை பார்க்கிறார். அதாவது சிவகாமியின் தோழி சுமதியின் மருமகளும் அதே மருத்துவமனையில் பிரசவம் ஆகி ஆண் குழந்தை பெற்றெடுக்கிறார்.

Also Read: சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட விஜய் டிவி.. பற்றி எரியும் கள்ளக்காதல் விவகாரம்

குடும்பத்திற்கு தன்னுடைய குழந்தை தான் முதல் வாரிசாக, அதுவும் ஆண் வாரிசாக இருக்கவேண்டும் என்ற அற்ப ஆசையில் அர்ச்சனா ஆண் குழந்தையை எடுத்துக்கொண்டு பெண் குழந்தையை சுமதியின் மருமகளிடம் வைத்துவிடுகிறார்.

குழந்தையை பார்க்க வந்த குடும்பத்தினர் குழந்தையின் சாயல் மாறி இருக்கிறதே என கேள்வி எழுப்புகின்றனர். அதையும் அர்ச்சனா அசால்டாக சமாளிக்கிறார். இதன்பிறகு ஒரே தெருவில் தன்னுடைய குழந்தை வேறு ஒருவருடன் வளர்வதை பார்க்கும் கல் நெஞ்சக்காரி ஆக அர்ச்சனா இருப்பார். ஒரு கட்டத்தில் அதையும் சந்தியா கண்டுபிடித்து அர்ச்சனாவின் கெட்ட எண்ணத்திற்கு சூடு போடப் போகிறார்.

Also Read: அருள்மொழிவர்மனை வைத்து ப்ரோமோஷன்.. சன் டிவியை ஒழித்து கட்ட விஜய் டிவியின் பிரம்மாண்ட முயற்சி

Trending News