வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

குழந்தையை மாற்றி கேவலமான வேலை செய்த அர்ச்சனா.. ஐபிஎஸ் சந்தியாவுக்கு கிடைத்த முதல் கேஸ்

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஸ் கனவுடன் இருந்த சந்தியா, தன்னுடைய கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் உதவியுடன் பரிட்சையில் தேர்வாகி, தற்போது ஐபிஎஸ் ட்ரெய்னிங்-கிற்கு சென்றிருக்கிறார்.

அவரைப் பார்க்க சந்தியாவின் மாமனார் மாமியார் சென்னைக்கு வந்ததால், அந்த சமயம் அர்ச்சனாவிற்கு பிரசவ வலி ஏற்படுகிறது. வீட்டு வேலைக்காரி மயில் தான் அர்ச்சனாவை மருத்துவமனையில் அனுமதித்து குழந்தை பிறக்கும் வரை அங்கு இருக்கிறார்.

Also Read: பிக்பாஸ் வீட்டுக்குள் களமிறங்கும் விவாகரத்து நடிகர்.. அப்ப ஒரு லவ் ஸ்டோரி கன்ஃபார்ம்

அர்ச்சனா எதிர்பார்த்ததற்கு மாறாக அவருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. இதனால் பெரும் ஏமாற்றத்தில் இருந்த அர்ச்சனா தரங்கெட்ட வேலையை பார்க்கிறார். அதாவது சிவகாமியின் தோழி சுமதியின் மருமகளுக்கும் அர்ச்சனாவுடன் குழந்தை பிறக்கிறது.

அவருக்கு ஆண் குழந்தை பிறப்பதால் அந்த குழந்தை பக்கத்து பெட்டில் இருப்பதை பார்த்த அர்ச்சனா, தன்னுடைய குழந்தையை அங்கு வைத்துவிட்டு ஆண் குழந்தையை எடுத்துக் கொள்கிறார். இது யாருக்கும் தெரியாத வகையில் பார்த்துக் கொள்கிறார்.

Also Read: சீரியல் நடிகைகளின் வாழ்க்கையை சீரழிக்கும் ஈஸ்வர்.. மகாலட்சுமி முதல் திவ்யா வரை

ஆனால் அர்ச்சனாவின் கணவர் செந்தில், ‘குழந்தையின் ஜாடை நம்முடைய குடும்பத்தில் இருப்பவர்கள் மாற்றமே இல்லையே’ என்று சந்தேகப்படுகிறார். அதையும் அர்ச்சனா சமாளித்து விடுகிறார். இதன்பிறகு ஒரே தெருவில் அர்ச்சனா பெற்றெடுத்த பெண் குழந்தை அவர் கண்முன்னே வளரும் அவலத்தையும் நாள்தோறும் பார்க்க துணிந்து விட்டார்.

ஆனால் ஒரு கட்டத்தில் ஐபிஎஸ் ட்ரெயினிங் முடித்து விட்டு வீட்டிற்கு வரும் சந்தியா குழந்தை கை மாறி இருப்பதை கண்டுபிடித்து விடுவார். போலீஸ் ஆன பிறகு சந்தியா கண்டுபிடிக்கும் முதல் கேஸ் இதுவாகத்தான் இருக்கும் என நெட்டிசன்கள் ராஜா ராணி 2 சீரியலை குறித்து கமெண்ட் செய்கின்றனர்.

Also Read: பல வருஷம் கஷ்டப்பட்டு வாங்க வேண்டியது.. மூனே எபிசோட்ல எப்படி? லாஜிக் இடிக்குது சந்தியா!

Trending News