வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

உண்மை முகத்தை காட்டாத நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. ஹெல்த் டிபார்ட்மெண்ட் கையிலெடுக்கும் கேஸ்

நயன்தாரா, விக்னேஷ் சிவன் விவகாரம் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி உள்ளது. நேற்று தனது சந்தோஷத்தை பகிரும் விதமாக விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதாவது இரண்டு ஆண் குழந்தைகளுக்கு நயனும், நானும் அம்மா, அப்பா ஆகி உள்ளோம் என பதிவிட்டார்.

இதை பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஒருபுறம் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தாலும் மறுபக்கம் இது பெரிய பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பல விஷயங்களை மறைத்து இந்த காரியத்தை செய்துள்ளார்கள்.

Also Read :6 மாசத்துக்கு முன்பே புட்டு புட்டு வைத்த பயில்வான்.. பிசுறு தட்டாமல் வெளிவரும் நயன்தாராவின் சீக்ரட்ஸ்

அவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இதனால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று இருந்தால் இதில் பல சட்டங்களை மீறி தான் இந்த விஷயம் நடந்திருக்க கூடும். இதுகுறித்து இன்று சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதாவது சாதாரணமாக வாடகை தாயாக உள்ளவர்களின் வயது 21 வயதில் இருந்து 36 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் குழந்தை வேண்டி வாடகை தாயிடம் செல்வோர்கள் சட்டப்படி சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். திருமணம் ஆகி கிட்டதட்ட ஐந்து வருடங்களாவது ஆகியிருக்க வேண்டும்.

Also Read :வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற 6 சினிமா பிரபலங்கள்.. சத்தமே இல்லாமல் காய் நகர்த்திய நயன்தாரா

மேலும் தம்பதியினர் ஒருவருக்கு உடல் ரீதியாக ஏதாவது பிரச்சனை இருந்தால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு சில விதிமுறைகளின் அடிப்படையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்றார்களா என்ற அமைச்சரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பொதுசுகாதாரத்துறையின் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விளக்கம் கேட்கப்படும் என அமைச்சர் பதிலளித்தார். இதனால் தற்போது ஒரு இக்கட்டான பிரச்சனையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மாட்டியுள்ளனர். அவர்கள் தரப்பிலிருந்து என்ன பதில் வருகிறது என்பது சில தினங்களில் வெளியாகலாம்.

Also Read :நயன்தாராவை கைது செய்ய வாய்ப்பு இருக்கா? மறைமுகமாக போட்டுக்கொடுத்த கஸ்தூரி

Trending News