வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரெட் கார்டு பஞ்சாயத்து வேஸ்ட்.. ஷங்கர் முடிஞ்சு இப்போ லைக்கா கண்ணில் விரல் விட்டு ஆட்டும் புயல் நடிகர்

தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கிய அந்த புயல் நடிகர் ஒரு காலத்தில் நடிக்கக்கூடாது என  ரெக்கார்ட் எல்லாம் போட்டார்கள். ஆனால் அதற்கு இப்போது பிரயோஜனம் இல்லாமல் போனது. இப்போதும் அவர் முன்பு போலவே ஒவ்வொரு படத்திலும் தேவையில்லாத பிரச்சனைகளை செய்து கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்திற்காக போடப்பட்ட செட் எல்லாம் வீணாகப் போனது. இதனால் அந்த படக்குழுவுக்கு பலகோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் வடிவேலு இந்த படத்தை முழுவதுமாக முடித்து கொடுக்காமல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகுகிறார்.

Also Read: வடிவேலுவை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்த இயக்குனர்.. இன்று வரை பேசப்படும் கேரக்டர்

முன்பு ஷங்கருடன் பிரச்சினையை வளர்த்துக்கொண்ட வடிவேலு தற்போது லைக்காவை கண்ணில் விரல்விட்டு ஆட்டுகிறார் . வடிவேலு ஏற்கனவே  2 படங்கள் நடித்துக் கொடுப்பதாக முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் இடம் வாக்குக் கொடுத்தார்.

அதை எல்லாம் காற்றில் பறக்க விட்டு இப்போது புது புது படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார். கொடுத்த வாக்கை எல்லாம் மறந்து தற்போது வடிவேலு லைக்காவை டீலில் விட்டு விட்டார். அவர்கள் கேட்கும்படி வடிவேலு நடந்து கொண்டிருப்பது அவர் மீது சுத்தமாகவே சினிமாவில் மரியாதை இல்லாத நிலை ஏற்பட வழிவகுக்கிறது.

Also Read: பந்தாவாக பேசி பேட்டி கொடுத்த வடிவேலு.. எதிர்பார்த்து ஏமாந்து போன நடிகரின் பரிதாப நிலை

தொடர்ந்து சினிமாவில் தன்னுடைய நல்ல பெயரை கெடுத்துக் கொண்டிருக்கும் வடிவேலு உருப்படியாக ஒரு படத்தை நடித்த பாடில்லை. ஆனால் அவருடைய நடிப்பை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஏங்குகின்றனர்.

ஒரு மனிதன் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்றால் அவருடைய திறமையை நேர்மையுடனும் நேர்த்தியுடனும் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அது வடிவேலுவிடம் சுத்தமாகவே இல்லை என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றுகின்றனர்.

Also Read: வளர்ச்சி பிடிக்காத வடிவேல்.. சூட்டிங்கை கேன்சல் செய்து கிளம்பிய அவலம்

Trending News