ரஜினி, விஜய் யாரா இருந்தாலும் இறங்கி சண்டை போடுவோம்.. துணிச்சலாக முடிவு எடுத்த போனிகபூர்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு பிறகு விஜய், அஜித் பல வருடங்களாக சினிமாவை ஆட்சி செய்து வருகிறார்கள். எதார்த்தமாக இருவரும் ஒன்றாக நடித்தார்கள் பின்னர் தனித்தனியாக நடிக்க ஆரம்பித்து தனது திறமையை நிரூபித்து மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தார்கள். யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்று இன்று வரை வெற்றி பெற்று வருகிறார்கள்.

2001 இல் தீனா, பிரண்ட்ஸ் திரைப்படங்கள் வெளியாகின அதில் ஆரம்பித்த சண்டை மிகத்தீவிரமாக இருந்தன. இவர்கள் படம் வெளியான நாளே அடிதடி சண்டைக்கு பஞ்சம் இருக்காது அவ்வளவு ஏன் உயிர் போகுமளவிற்கு சண்டை போட்டுக்கொள்வார்கள் அவரது ரசிகர்கள், அது குறைந்தபாடில்லை அதிகமாக நடந்து வந்த காலகட்டம் அது.

தற்போது 8 வருடங்களாக இந்த சண்டைகள் குறைந்து வந்தன, மீண்டும் இந்த பிரச்சினை தலை தூக்க துவங்கியுள்ளது. அதற்கு காரணம் அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூர் என்று கூட சொல்லலாம். தீபாவளிக்கு துணிவு படத்தை வெளியிட அறிவித்திருந்தார்கள். அதற்கு முன்னரே பொங்கலுக்கு வாரிசு படத்தை வெளியிடப்போவதாக விஜய் அறிவித்துவிட்டார். இப்பொழுது போனி கபூர் தேவையில்லாமல் பொங்கலுக்கு அஜீத் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க விஜய் திரைப்படம் தெலுங்கு இயக்குனரை வைத்து எடுத்ததால் அங்குதான் அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் தமிழில் எதிர்பார்ப்பு குறைவு என்று நினைத்துக்கொண்டு அதனை பயன்படுத்தி போனிகபூர் தைரியமாகக் களத்தில் இறங்கலாம் என்று இறங்கி விட உள்ளாராம். விஜய் படத்தின் எதிர்பார்ப்பு அடுத்து இயக்கும் லோகேஷ் படத்தின் மீது சென்று விட்டது ஆனால் வாரிசுப் படத்திற்கு எதிர்பார்ப்பு குறைவாக இருக்கிறது. இதனால் ரஜினி, விஜய் யாராக இருந்தாலும் இறங்கி சண்டை போடுவோம் என போனிகபூர் முடிவு செய்துவிட்டார்.

இதனை எதிர்பார்க்காத தியேட்டர் விநியோகஸ்தர்கள் பயந்து கொண்டிருக்கிறார்கள் காரணம் வசூலை பாதிக்கும் என்று, அது ஒரு புறமிருக்க ரசிகர்கள் அடித்துக்கொள்வது மறுபடியும் தொடங்கப் போகிறது என்று நினைக்கும்பொழுது கோலிவுட்டே பயத்தில் இருக்கிறது. வசூல் ரீதியாக பார்க்கும்போது விஜய் படங்கள் அதிக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் அதனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் போனிகபூர் செய்வது யாரை பாதிக்கும் என்று தெரியவில்லை.

இதை விஜய் மற்றும் அஜித் இது மாதிரி விஷயங்களை விரும்ப மாட்டார்கள் ஆனால் அவர்களைப் பயன்படுத்தி வசூலுக்காக தயாரிப்பாளர்கள் செய்யும் வேலைகளால் பதற்றத்தையும், பயத்தையும் உருவாக்குகிறது. இதை போனிகபூர் மறுபரிசீலனை செய்து ஒரு வாரம் கழித்து கூட வெளியிடலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →