தமிழ் சினிமா எப்போதுமே பெண்களை கொண்டாட தவறியதே இல்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிறைய கதைகள் தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்டு இருக்கின்றன. அதிலும் ஆண்-பெண் நட்பை கோலிவுட் சினிமா அன்றிலிருந்து இன்றுவரை போற்றிக்கொண்டு தான் இருக்கிறது. பெண் நட்பை போற்றிய 5 சிறந்த படங்கள்,
புதுவசந்தம்: இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் புதுவசந்தம். இந்த படத்தில் முரளி, சித்தாரா, ஆனந்த் பாபு, ராஜா, மற்றும் சார்லி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் சித்தாரா நான்கு இளைஞர்கள் தங்கியிருக்கும் வீட்டில் அடைக்கலமாக வருவார். அவருடைய வரவிற்கு பிறகு அந்த இளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் நல்ல மாற்றங்கள் தான் இந்த படத்தின் கதை.
பாலைவனசோலை : இயக்குனர் சந்திரசேகர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான படம் பாலைவன சோலை. சந்திரசேகர், ஜனகராஜ், ராஜீவ், கைலாஷ் நாத், தியாகு, சுஹாசினி, கலைவாணி ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். மதிசுவற்றின் மீது வெட்டியாய் உட்கார்ந்து வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்த இளைஞர்களின் வாழ்க்கையை சுஹாசினியின் நட்பு சீர்திருத்துவது போல இந்த படம் அமைந்து இருக்கும்.
பைவ்ஸ்டார்: இயக்குனர் சுசிகணேசன் இயக்கத்தில் பிரசன்னா, கார்த்திக், கிருஷ்ணா, கனிகா, மங்கை, ராபர்ட், சுகுமார், விஜயன், சித்ரா, தேனி குஞ்சரம்மாள், சந்தியா ஆகியோர் நடித்த இந்த படம் 2002 ஆம் ஆண்டு வெளிவந்தது. நடிகர் பிரசன்னாவுக்கு இது தான் முதல் படம். கல்லூரி நட்பை போற்றும் விதமாக இந்த படத்தின் கதை இருக்கும்.
ஆட்டோகிராப்: ஆண்-பெண் நட்பிற்கான சிறந்த கதை என்றால் அது ஆட்டோகிராப் படத்தின் செந்தில்-திவ்யா நட்பு தான். காதல் தோல்வியால் துவண்ட நண்பனை ஆதரித்து அவனது வாழ்க்கையை சீரமைக்கும் தோழியின் நல்ல நட்பை இந்த படத்தில் காணலாம்.
பெங்களூர் டேஸ்: உறவுகளில் இருக்கும் ஆண்-பெண் நட்பை எடுத்துக்கூறிய படம் பெங்களூர் டேஸ். இந்த படத்தில் நஸ்ரியா, துல்கர் சல்மான், நிவின் பால், பகத் பாசில் நடித்திருந்தனர். படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் பெங்களூர் நாட்கள் இந்த படம் எடுக்கப்பட்டது. இதில் ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, ராணா தகுபதி ஆகியோர் நடித்திருந்தனர்.