1. Home
  2. கோலிவுட்

நயன்தாராவின் குழந்தையை சுமந்த தாய் யார் தெரியுமா.? உச்சகட்ட அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்

நயன்தாராவின் குழந்தையை சுமந்த தாய் யார் தெரியுமா.? உச்சகட்ட அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அண்மையில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததாக விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளபக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இப்புகைப்படம் இந்திய சினிமாவில் உள்ள பல ரசிகர்களிடம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் வரவழைத்தது.

நயன்தாராவிற்கு ஜூன் 9-ஆம் தேதி திருமணமான நிலையில் நயன்தாராவிற்கு நான்கு மாதத்தில் எப்படி குழந்தை பிறக்க முடியும். அப்போது என்றால் இவர்கள் திருமணத்திற்கு முன்பாகவே வாடகைத் தாயை தேர்ந்தெடுத்து குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்துள்ளனர் என்ற செய்தி வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

பொதுவாக திருமணமானவர்கள் திருமணம் ஆனதற்கு பின்பாக குழந்தை இல்லை என்றால் மட்டுமே, வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றெடுத்துக் கொள்வர். ஆனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் செயல் பலரையும் அதிர்ச்சியடைய வைத்த நிலையில், இந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நயன்தாராவின் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த வாடகைத் தாய் யார் என்ற விபரம் வெளியாகியுள்ளது.

மேலும் வாடகைத்தாய் சட்டப்படி உறவுமுறை பெண்ணை வைத்து, குழந்தைகளை பெற்றெடுக்க அனுமதி உள்ள நிலையில், உறவுமுறை பெண்ணிடமிருந்து தான் நயன்தாராவிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர் என்று செய்தி அண்மையில் வெளியானது.

அதன்படி நயன்தாராவின் அண்ணன் துபாயில் வசித்து வரும் நிலையில், அவர் தங்கும் இடத்திலேயே பல மலையாள குடும்பத்தினர் தங்கி வருவதால் நயன்தாராவின் உறவுமுறை பெண் தான் நயன்தாராவிற்கு வாடகைத் தாயாக செயல்பட்டு இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார் என்று செய்தி வெளியாகி உள்ளது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகளுக்கு தாயான மலையாள குடும்பத்தைச் சேர்ந்த பெண், துபாயில் வசித்து வரும் செய்தி தற்போது கசிந்துள்ள நிலையில், அவர் யார் என்ற புகைப்படம், பெயர் உள்ளிட்டவை கூடிய விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.