நயன்தாரா, விக்கி ஜோடி தமிழ்நாடே போற்றும் அளவிற்கு திருமணத்தை செய்து பின்னர் ஹனிமூன் செல்ல மாட்டார்கள் என்ற சொன்னவர்களுக்கு அதற்கு பதிலடி தரும் விதத்தில் வெளிநாட்டில் பல மாதங்களாக அங்கு தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தனர். எப்பொழுது ஹனிமூன் முடித்துவிட்டு திரும்புவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில்.
டுவிட்டரில் விக்னேஷ் சிவன் நாங்கள் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று கூறி குழந்தை போட்டோக்களை வெளியிட்டனர். விளையாட்டுத்தனமாக ரசிகர்களுக்காக போட்டோவை வெளியிட்டு மிகப்பெரிய பிரச்சினை மாற்றிக் கொள்வார்கள் என்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை. அது பூதாகரமாக மாறி இன்று அவர்கள் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது.
வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்த குழந்தை பிரச்சனை மிக பூதாகரமாக மாறி தமிழக அரசு விசாரணை நடத்தும் அளவிற்கு வந்துவிட்டது. அந்த விசாரணையின் அடுத்தகட்டம் அவர்கள் எந்த மருத்துவமனையில் குழந்தை பெற்று எடுத்தார்கள் என்ற விவரம் கைக்கு கிடைத்துள்ளது. மேலும் அந்த மருத்துவமனையில் விசாரணை நடைபெற்று வருகிறது அதில் ஒரு சிறு தவறு இருந்தாலும் நயன்தாரா விற்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.
அவர்கள் எப்போது தமிழ்நாடு வந்தார்கள் என்று தெரியவில்லை ஆனால் அவர்கள் சென்னை எக்மோரில் உள்ள தனது வீட்டில் தான் இருக்கிறார்கள் என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது. வீட்டிலேயே முடங்கி உள்ளனர். வழக்கறிஞர்கள் மட்டும் வீட்டிற்குள் சென்று வருகிறார்கள். ஜவான் படத்தில் நடித்த நயன்தாரா படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். அதனால் படக்குழு கடுப்பில் இருக்கிறது. காரணம் ஷாருக்கான் சென்னையில் 40 நாள் படப்பிடிப்பிற்காக இங்கேயே தங்கி உள்ளார்கள்.
பிரச்சினை இல்லை என்றால் எதற்காக பயந்து கொண்டு வீட்டிற்குள் முடங்கி இருக்கிறார்கள் என்று கேள்வி எழுகிறது. அனைத்து முறைப்படி செய்திருக்கிறார்கள் என்றால் தாராளமாக வெளியில் வரலாம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் அதை அவர்கள் செய்ய பயம் எதற்கு வருகிறது. ஆனால் ஏதோ ஒரு தவறு செய்திருக்கிறார்கள் அது கண்டிப்பாக மாட்டிக் கொள்வார்கள் என்று தெரிய வருகிறது.
எப்படிப்பார்த்தாலும் நயன் ஜோடிக்கு தண்டனை கிடைத்தாலும் அதை மாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் மக்கள் மனதில் ராணியாக இருந்த நயன்தாரா இப்படி அவப்பெயர் ஏற்படும் விதத்தில் நடந்து கொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இனிமேல் அவர் நடித்து பழைய நிலைக்கு வந்தாலும் முன்பு இருந்த ரசிகர்கள் மாதிரி இனிமேல் இருப்பது கஷ்டம். முக்கியமாக அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் படம் நடக்குமா, நடக்காதா என்ற கேள்வியும் எழுகிறது.