புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பிக் பாஸில் ஒஸ்ட், பெஸ்ட் கண்டஸ்டன்ட் யாரு தெரியுமா? ஒரே ஆளையே டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்

பிக் பாஸ் தொடங்கி ஒரு வாரம் ஆன நிலையில் போட்டியாளர்கள் சகஜமாக பழகத் தொடங்கியுள்ளனர். எப்பொழுதும் 40 நாட்களைக் கடந்த தான் சண்டை சூடு பிடிக்க ஆரம்பிக்கும். ஆனால் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கிய ஒரு வாரத்திலேயே சண்டை அனல் பறக்க நடந்து வருகிறது. ஒரே வீட்டுக்குள் 20 போட்டியாளர்கள் என்பதால் எல்லோருடனும் ஒருவர் நெருக்கமாக இருப்பது கடினம் தான்.

மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை உலக நாயகன் கமலஹாசன் வருகை தந்திருந்தார். அப்போது ஒரு டாஸ்க் கொடுத்திருந்தார். அதாவது முதலில் இந்த வீட்டில் உள்ள ஒரு நபர் உங்களுக்கு மிகவும் பிடித்து இருக்கிறதோ அதேபோன்ற குணம் உடைய இன்னொரு நபர் வரவேண்டும் என்றால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டிருந்தார்.

Also Read :அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பிக்க வந்த வைல்ட் கார்ட் என்ட்ரி.. சூடு பிடிக்கும் பிக்பாஸ் வீடு

அதில் சக போட்டியாளர்கள் பெரும்பாலானோர் ஜி பி முத்து மற்றும் அமுதவாணனை தேர்ந்தெடுத்தார்கள். இதில் அதிக வாக்குகள் பெற்றது அமுதவாணன் தான். எல்லோரும் தன்னை இவ்வளவு நேசிக்கிறார்களே என்று ஒரு கணம் அமுதவாணன் கண்ணீர் மல்க பேசினார்.

அப்போதே ஆட்டத்தை இன்னும் விறுவிறுப்பாக உலகநாயகன் மற்றொரு டாஸ்க் கொடுத்தார். அதாவது இந்த வீட்டில் அவர் இருப்பதும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான். அப்படி தோன்றும் ஒரு நபரை தேர்ந்தெடுக்குமாறு போட்டியாளர்களிடம் கூறப்பட்டது. அப்போது பெரும்பாலானோர் விக்ரமனை தேர்ந்தெடுத்தார்கள்.

Also Read :ஜிபி முத்துவுக்கு ஜோடியாகும் 2 பெண்கள்.. வயிற்றெரிச்சலில் இருக்கும் ஆண் போட்டியாளர்கள்

ஒஸ்ட் பெர்ஃபார்மன்ஸ்காக தனக்கு கொடுக்கப்பட்டதை எண்ணி விக்ரமன் வருந்தினார். அதற்கு கமல் உள்ளே இருப்பவர்கள் நினைப்பதை விட வெளியே வேறுவிதமாக இருக்கும். இதை நீங்கள் பிளஸ் பாயிண்ட் ஆக மாற்றிக் கொள்ள வேண்டும் என விக்ரமனுக்கு கமல் அறிவுரை வழங்கினார்.

மேலும் தன்னை தப்பாக நினைத்ததாக குவின்ஸியிடம் விக்ரமன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் பிக் பாஸ் போட்டியாளர்கள் இடையே ஒற்றுமை என்னவென்றால் பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ்க்கு அதிக பேர் அமுதவாணையனையே தேர்ந்தெடுத்தது போல் போஸ்ட் பெர்ஃபார்மன்ஸ்க்கு விக்ரமனை ஒருமித்தமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

Also Read :மக்களை அதிகம் கவர்ந்த 5 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. முதலிடத்தை பிடித்த தலைவர் ஜிபி முத்து

Trending News