ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கிரண். இவருடைய தாராள கவர்ச்சியால் இளசுகளை சுண்டு இழுத்தார். ஆனால் அதன் பின்பு கவர்ச்சி நடிகை என முத்திரை குத்தப்பட்ட கிரணுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது.
இதனால் தற்போது வீட்டிலேயே முடங்கி கிடக்கும் கிரண் வருமானத்திற்காக ஒரு விஷயத்தை தொடங்கியுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அரைகுறை ஆடைகளுடன் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். இப்போது இதை வைத்து காசு பார்க்க ஒரு செயலி தொடங்கியுள்ளார்.
மேலும் அந்த செயலியில் ஒவ்வொன்றுக்கும் தனி தனியாக விலைப்பட்டியல் போட்டுள்ளார். அதாவது முதலில் அந்த செயலியை பதிவிறக்க வேண்டும் என்றாலே 49 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் கிரணின் இரண்டு கவர்ச்சி படங்கள் அனுப்பப்படும்.
இதைத்தொடர்ந்து கிரணுடன் ஐந்து நிமிடம் பேசுவதற்கு 10000 ரூபாயாம். அதுவே வீடியோ காலில் 15 நிமிடம் பேச வேண்டும் என்றால் 14,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இன்னும் சற்று கிரணுடன் கூடுதலாக வீடியோ காலில் பேச வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு 25 நிமிடங்களுக்கு 25 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
அதாவது ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் வசூலித்து வருகிறார். இதனால் தற்போது உள்ள இளசுகள் எல்லாம் கிரணின் செயலில்தான் குவிந்து கிடக்கிறார்களாம். ஆனால் சிலர் இது போன்ற அந்தரங்க விளையாட்டை வைத்து பணம் சம்பாதிக்கும் கேவலம் வேறு எங்கும் நடக்குமா என கிரணை கண்டபடி திட்டு வருகிறார்கள்.
சாதாரணமாகவே சினிமாவில் உள்ள நடிகைகள் ஒரே நடிகருடன் இரண்டு, மூன்று படங்களில் சேர்ந்து நடித்தால் அவர்களுடன் கிசுகிசுக்கப்படுகிறார்கள். மேலும் கவர்ச்சி போட்டோ சூட் நடத்தினால் பட வாய்ப்புக்கு தான் என்று கூறிவரும் நிலையில் கிரண் இவ்வாறு செய்து வருவது மற்ற நடிகைகளும் கேவலமாக சித்தரிக்கப்படுகிறார்கள்.